நீ வந்து விளக்கு பிடிச்சயா, செருப்பு பிஞ்சிடும் – நடு ரோட்டில் பயில்வானை வெளுத்து வாங்கிய இரவின் நிழல் பட நடிகை.

0
1899
rekha
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். அதனால் சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருவதால் சினிமா நட்சத்திரங்களைப் பற்றி அறியாத பல ரகசியங்களை தன்னுடைய பத்திரிக்கையின் மூலம் வெளியிட்டு வருகிறார்.மேலும், இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து உள்ளார்.

- Advertisement -

நடிகைகள் குறித்த சர்ச்சை :

அதனால் இவருக்கும் சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களுக்கும் இடையயே வாக்குவாதம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், வரும் எதிர்ப்புகளுக்கும் பதிலடி கொடுத்து தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்து வருகிறார் பயில்வான்.இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் சினிமா பிரபலங்களை பற்றி பேச ஆரம்பித்த பின் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார்.

ராதிகா குறித்து அவதூறு பேச்சு :

அதிலும் சமீப காலமாக இவர் நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் எப்படி நடிகைகளுக்கு விவாகரத்து ஆனது என்பது குறித்தும், நடிகைகளுக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்தும் பல்வேறு சர்ச்சைகளை பேசி வருகிறார். சமீபத்தில் இவர் நடிகை ராதிகாவையும் அவருடைய தாயாரையும் பற்றி அவதூறாக பேசி இருந்த வீடியோவை யூட்யூப் இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

சண்டையிட்ட ராதிகா :

இந்த நிலையில் திருவான்மியூர் கடற்கரையில் பயில்வான் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். ராதிகா அவரை வழிமறித்து தன் தாயை பற்றி எப்படி அவதூறாக பேசி இருக்கிறாய்? என தகாத வார்த்தைகளால் சண்டை போட்டதாகவும் அவரை அடித்தாகவும் செய்திகள் வெளியானது. ராதிகாவை தொடர்ந்து தற்போது மகிழ்வான் ரங்க நாதனே நடுரோட்டில் வெளுத்து வாங்கி இருக்கிறார் இரவின் நிழல் பட நடிகை ரேகா நாயர் பார்த்திபன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில் ரேகா நாயர் பார்த்திபனின் அம்மாவாக நடித்திருந்தார்.

ரேகா நாயர் பற்றிய சர்ச்சை பேச்சு :

மேலும், இந்த படத்தில் பிணமாக நடித்ததோடு மட்டுமல்லாமல் அரை நிர்வாணமாகவும் நடித்திருந்தார். ஆனால், இவர் நடித்த காட்சி சற்றும் ஆபாசமாக திரையில் தோன்றவில்லை. ஆனால், அனைத்து நடிகைகள் குறித்தும் கொச்சையாக பேசி வரும் பயில்வான் ரங்கநாதன் ரேகா நாயர் குறித்தும் இரவின் நிழல் படத்தில் இவர் நடித்த நிர்வான காட்சி குறித்தும் படு ஆபாசமாக பேசி இருந்தார்.

நடு ரோட்டில் வெளுத்து வாங்கிய ரேகா நாயர் :

இப்படி ஒரு நிலையில் சென்னையில் உள்ள கடற்கரை பகுதியில் பயில்வான் ரங்கநாதன் உடற்பயிற்சிக்காக சென்று கொண்டிருந்தபோது அங்கே வந்திருந்த ரேக் ஆனாயர் பயில்வான் ரங்க நாதனை வெளுத்து வாங்கி இருக்கிறார். மேலும் தன்னை எவ்வாறு அப்படி பேசலாம், நீ வந்து எனக்கு விளக்கு பிடித்தாயா, செருப்பு பிஞ்சிடும் என்று பயில்வான் ரங்கநாதன் வெளுத்து வாங்கிய ரேகா நாயர் ஒரு கட்டத்தில் அவரை அடிக்கவும் கை ஓங்கினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement