இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளராக திகழ்பவர் ஏ. ஆர். ரகுமான். இவர் சிறுவயதில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான `வொன்டர் பலூன்’ என்ற நிகழ்ச்சியில் வாசித்துப் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி இருந்தார். அதன் பின்னர் இவர் பல இசைக் கச்சேரிகளில் கலந்து கொண்டு தன்னுடைய தனித்துவத்தை வெளிப்படுத்தி இருந்தார்.மேலும், இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கி இருந்தார்.
இவர் தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். அதோடு, ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானது ரோஜா படம் என்றாலும் அதற்கு முன்பாக இளையராஜா, டி ராஜேந்தர் என்று பல்வேறு இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.
ரகுமான் இசைப்பயணம்:
இரண்டு ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர் ரகுமான். தற்போது உலக அளவில் புகழ்பெற்ற இசை அமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிசியாக இருக்கிறார். தற்போது இவர் இயக்குநர் மணிரத்னத்தின் பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் படத்தில் இசையமைத்து இருக்கிறார். மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது.
ஏ.ஆர்.ரகுமான் மகன் :
கடந்த 1995ஆம் ஆண்டு செரினா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர். அதில் கடைசி மகன் தான் அமீன். இவரும் தன்னுடைய தந்தை போல இசையில் ஆர்வம் உள்ளவர்.இந்த நிலையில் தனது தந்தையிடம் தனது பாடலை அனுப்பி இருக்கிறார். அதனை கேட்ட ரஹ்மான் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்து இருக்கலாம் எதோ மிஸ் ஆகிறது என்று ககூறியுள்ளார். இதற்கு அமீன் ‘அப்பா, ஏன் எப்போதும் என்னை கேலி செய்கிறீர்கள்’ என்று கேட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முணர்ட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடல் ஒன்றை பாடி ஒரு நிமிட வீடியோ பதிவாக வெளியிட்டிந்தார் இந்த வீடியோ தற்போது 2மில்லியன் பார்வையாளர்களை தான்னடியுள்ளது. மேலும் இப்பாடலை கேட்டதற்கு அவரது தந்தை ஏ.ஆர். ரகுமானை போல இருக்கிறது என்று கூறி வருகின்றனர். பிரபலமான சோசியல் மீடியாவான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இசைக்கலைஞர்கள் மற்றும் பாடலாசிரியர்கள் தங்களுடைய பாடல்களை இன்ஸ்டாகிராம் ரீல்ஸிற்காக ஆல்பங்களை வெளியிட்டு வருகின்றனர்.
வைரலான பாடல் :
புது கலைஞர்களின் இசையை வெளிப்படுத்தும் நோக்கில் மீட்டா நிறுவனம் ஒரு நிமிட பாடல் என்கிற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் யுவன் சங்கர் ராஜா, பென்னி தயால் போன்றவர்கள் தங்களுடைய ஒரு நிமிட பாடலை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் தான் தற்போது ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீனும் “அடியே சோனாலி” என்கிற பாடலை பாடி வெளியிட்டுள்ளார். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இப்பாடல் வெளியாகி நான்கே நாட்களில் 2 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.