ஒரே நாளில் வீட்டில் இரண்டு பிறந்தநாள், நகை பழக்கம், டீ பழக்கம், வீடியோ கேம்ஸ் – ஆஸ்கர் நாயகனை பற்றி அறியாத பல விஷயங்கள்.

0
251
arrahman
- Advertisement -

இசை என்பது பலருடைய வாழ்க்கையில் மாறுதல்களை ஏற்படுத்துகிறது. அந்தவகையில் மறுமலர்ச்சியை உண்டுபண்ணும் இசை முகங்களில் ஒருவர்தான் ஏ ஆர் ரகுமான். இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவரின் உண்மையான பெயர் திலீப் குமார். இவர் தன்னுடைய 23வது வயதில் மதகுரு, காத்ரி இஸ்லாமின் வழிகாட்டுதலோடு இஸ்லாம் மதத்தை தழுவினார். இவருடைய தந்தை பெயர் ஆர்.கே.சேகர். இவர் மலையாளத்தில் 50 படங்களுக்கு மேல் இசையமைத்தவர். அதுமட்டுமில்லாமல் ஏ.ஆர். ரகுமானுக்கு சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் உடையவர்.

-விளம்பரம்-

இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார். பின் ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கும் இசையமைத்து உள்ளார். மேலும், இரண்டு ஆஸ்கர் விருதை குவித்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர் ஏ ஆர் ரஹ்மான். கடந்த 1995 ஆம் ஆண்டு இவர் சாய்ரா பானு என்பவரை செய்துகொண்டார். இவர்களுக்கு அமீன் என்ற மகனும், கதீஜா ரகுமான், ரெஹிமா ரகுமான் என்ற இரு மகள்களும் உள்ளனர்.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் இப்ப இருக்கிற இசை இளைஞர்களுக்கு ஏ ஆர் ரகுமான் தான் வாத்தியார் என்று சொல்லலாம். இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஆஸ்கார் நாயகனை பற்றி அறியாத பல விஷயங்களை இங்கு பார்க்கலாம்.

செல்லப் பெயர் :

1.ரகுமானுக்கு வீட்டில் செல்லப் பெயரே கிடையாது. அவருடைய சகோதரிகள் வாய்நிறைய ரகுமான் என்றுதான் அவரை அழைப்பார்கள்.

-விளம்பரம்-

2.பத்மா சேஷாத்திரி பள்ளியில் குடும்ப சூழல் காரணமாக ரகுமான் ஒன்பதாம் வகுப்பு வரைதான் படித்தார்.

 • இன்று அவருடைய பிறந்த நாளாக இருந்தாலும் அவர் அதை விமர்சையாக கொண்டாடியது கிடையாது. எப்போதும் ஆழ்ந்த அமைதியோடு தான் இந்த நாளை ரகுமான் கழிப்பார்.
 • ரகுமானுக்கு அவரது மகன் அமீனுக்கு ஒரே நாளில் தான் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
 • இவர் எங்கு சென்றாலும் உணவை தேடி அலையமாட்டார். எளிமையாக ரசம் சாதம் போதும் என்று சாப்பிடுவார்.
 • இவர் எப்போதும் தங்க நகை அணிவது கிடையாது. ஒரு நெலி பிளாட்டினம் மோதிரம் விரலில் கிடக்கும். அதோட கடிகாரம் கட்ட மாட்டார்.
 • இவருக்கு எப்போதும் எம்ஜிஆர், சிவாஜி பாடல்கள் எல்லாம் ரொம்ப பிடிக்கும். யார் இல்லைனாலும் அவரே வாய்விட்டு பாடுவார்.
 • அதிலும் எம்ஜிஆர் உடைய புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது என்ற பாடலை ரகுமான் பாடினால் படத்துக்கான அத்தனை வேலைகளும் முடிந்து விட்டது என்று அர்த்தம்.
 • மேலும், ரகுமான் விடுமுறை என்றாலே குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு பயணம் சென்றுவிட்டார். அதிலும் சமீப காலமாக குவைத்தில் தான் அதிக காலம் கழித்து வருகிறார்.அதிலும் இவர் ஆறு மாதத்திற்கு ஒரு தடவை ஹைதராபாத், நாகூர் தர்காவிற்கு சென்றுவிடுவார்.
A.R.Rahman Unseen Pics,Unseen Pics of A.R.Rahman, | A.R Rahman Collections
 • முக்கியமான இசை விழாக்களில் ரகுமான் உடைய ஆடை எல்லாம் அதிக கவனம் எடுத்து செய்வதாக இருக்கும். அது எல்லாம் தயார் செய்வது அவருடைய மனைவி சாயிரா, மும்பை டிசைனர் தீபக்.
 • ரகுமான் காபி குடிக்கும் போது அதிக சர்க்கரை சேர்த்து குடிக்கிற பழக்கம்.
 • ஹஜ் யாத்திரைக்கு இரண்டு முறை ரகுமான் சென்றுவிட்டார்.
 • எங்கே கிளம்பினாலும் ரகுமான் தந்தை சேகர் படத்தை வணங்கி விட்டுதான் வெளியே செல்வார்.
 • மேலும், இயக்குனர் மணிரத்தினம் எந்த நொடி நினைத்தாலும் ரகுமானை சந்திக்க முடியும். அந்தளவிற்கு ரகுமானுக்கு அவ்வளவு மரியாதை.
A.R.Rahman Birthday Special Rare PIctures - Gethu Cinema
 • எப்போதுமே ரகுமான் குறைவாக தான் பேசுவார். ஆனால், நெருங்கிய நண்பர்களிடம் அதிகம் பேசுவார். இருந்தாலும் அவர் அதிகம் தனிமையை தான் விரும்புவார்.
 • ரகுமானுக்கு ரொம்ப பிடித்தது வீடியோ கேம்ஸ் தான். வீட்டில் இருக்கும்போது குழந்தைகளுடன் அவர் விளையாடும் சத்தம் வீட்டையே இரண்டாகும்.
 • பொழுதுபோக்கு இடங்கள்,தியேட்டர் என எங்கேயும் ரகுமானை பார்க்க முடியாது. ரகுமானின் உலகம் எல்லாமே வீடு அலுவலகம் தான்.

இப்படி ரகுமான் பற்றிய பல தகவல்களை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் வைரலாகி வருகின்றார்கள். அதுமட்டுமில்லாமல் ரகுமான் பிறந்தநாளுக்கு பலரும் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement