பூஜை அறையில் விஜய்யின் புகைப்படம்.! கழுவி ஊற்றும் ரசிகர்கள்.!

0
4662
vijay
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்ட ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். விஜய்யின் ரசிகர்கள் இவருக்காக எந்த நிலைக்கும் செல்வார்கள் என்பதும் அறிந்த ஒரு விடயம் தான்.

-விளம்பரம்-

சமீபத்தில் சென்ற விஜய் பிறந்தநாளுக்கு கூட பல்வேறு திரையரங்குகளில் விஜய்யின் பல படங்கள் திரையிடபட்டது. மேலும், விஜய் ரசிகர்கள் விஜய் பிறந்தநாளை ஒட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகளை கூட செய்திருந்தது பாராட்டக்கூடிய விடயமாக அமைந்தது.

இதையும் பாருங்க : சத்தமில்லாமல் வெளியான ‘கடாராம் கொண்டான்’ படத்தின் ட்ரைலர் அறிவிப்பு.! 

- Advertisement -

இப்படி விஜய் மீதுள்ள அன்பை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்தாமல் ஒரு சில ரசிகர்கள் மூட நம்பிக்கையுடன் செய்து வரும் விஷயங்கள் கேலி கிண்டலுக்கு உள்ளாகி விடுகிறது. கையில் கற்பூரம் ஏற்றுவது. உடலில் பச்சை குத்திக்கொள்வது என்று ரசிகார்களின் சேட்டைக்கு ஒரு அளவே இல்லாமல் சென்று கொண்டிருந்தது.

-விளம்பரம்-

இந்த நிலையில் இந்த அனைத்தையும் மீறி விஜய் ரசிகர் ஒருவர் விஜய்யின் புகைப்படம் ஒன்றை தனது பூஜை அறையில் சாமியுடன் சாமியாக வைத்து வழிபட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வர ரசிகர்கள் பலரும் அந்த ரசிகரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

Advertisement