பல தடைகளுக்கு பின் வெளியான ‘ஆடை’ படத்தின் விமர்சனம்.!

0
7756
aadai

வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான ‘மேயாத மேன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்கிய ரத்னகுமார் தற்போது அமலா பாலை வைத்து ‘ஆடை’ திரைப்படத்தை இயக்கியுளளார். பல்வேறு தடைகளுக்கு பின்னர் வெளியாகியுள்ள இந்த படம் எப்படி உள்ளது என்ற விமர்சனத்தை தற்போது காணலாம்.

கதைக்களம் :

- Advertisement -

படத்தின் ஆரம்பத்தில் மார்பகங்களை மறைக்க வரி கட்ட வேண்டும் என திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த சட்டத்தை எதிர்த்து நங்கெலி என்ற பெண் நடத்திய போராட்டம் பற்றிய கதை ஓடுகிறது. இதனை வைத்தே நங்கெலியை தொடர்புபடுத்தித்தான் இந்த திரைப்படம் நகரப்போகிறது என்று நம்மால் யூகித்துவிட முடிகிறது.

இதையும் பாருங்க : விக்ரமின் ‘கடாரம் கொண்டான் ‘ விமர்சனம்.! 

படத்தில் காம்னியாக வரும் அமலா பால், நண்பர்களுடன் சேர்ந்து ‘தொப்பி’ என்ற பிராங்க் ஷோக்களை நடத்தி வருகிறார். விதவிதமா கெட்டப்புகளை போட்டு யாரேன்றே தெரியாத நபர்களை பங்கமாக கலாய்த்து வருகிறார். பிராங்க் ஷோவில் கலகலவென இருக்கும் அமலா பால் நிஜத்தில் மிகவும் ஜாலியான பெண்ணாக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

எதற்கு எடுத்தாலும் பந்தயம் வைத்து விளையாட்டாக இருந்து வருகிறார் அமலா பால். அமலா பாலின் பந்தய பழக்கத்தை அவரது தாயார் மிகவும் கண்டிக்கிறார். ஆனால், அதனை எல்லாம் காதில் வாங்காமல் இருந்து வருகிறார் அமலா பால்

ஒரு கட்டத்தில் அமலா பால் மற்றும் அவரது நபர்கள் பணிபுரிந்து வரும் அலுவலகத்தை இடம் மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் காலியாக இருக்கும் அவர்களது பழைய அலுவகத்தில் பார்ட்டி கொண்டாடிக்கிறார்கள். போதை தலைக்கு ஏறியதும் நடிகை அமலா பால் நான் நிர்வாணமாக இதே பில்டிங்கீழ் இருக்கிறேன் என்று பந்தயம் காட்டுகிறார்.

பின்னர் காலை கண்விழுத்து பார்த்தால் அமலா பால் ஒரு பொட்டு ஆடை இல்லாமல் நிர்வாணமாக தனியாக இருக்கிறார். அவர் பணிபுரிந்து வந்த அலுவலகம் முழுவதும் காலியாக இருப்பதால் அங்கே கிடைக்கும் பொருட்களை எல்லாம் வைத்து தன்னை மறைத்துக்கொள்கிறார் அமலா பால்.

இறுதியில் அமலா பால் எப்படி அங்கிருந்து தப்பிக்கிறார். அவர் நிர்வாணமாக இருக்கும் போது சிலர் மூலம் வரும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார் என்பது தான் மீதிக்கதை.

பிளஸ் :

படத்தின் மிகப்பெரிய பலம் அமலா பால் தான். இப்படி ஒரு போல்டான கதாபாத்திரத்தை எடுத்து நடித்ததற்கு அவருக்கு முதல் பாராட்டு. படத்தில் வரும் நிர்வாண காட்சியை ஆபாசம் இல்லாமல் நம்மை பார்க்க வைத்திருப்பது இயக்குனருக்கு ஒரு மிகப்பெரிய பாராட்டை அளித்துள்ளது. மேலும், பிஜிலி ரமேஷின் என்ட்ரி மிகவும் ஆச்சர்யபடும் அளவிற்கு இருந்தது. படத்தின் கேமரா மேன் பல காட்சிகளில் மெனக்கெட்டுள்ளது தெரிகிறது. பேய் படத்திற்கு இணையாக ஒரு சில காட்சிகளில் நம்மை திரில்லர் மூடுக்கு கொண்டு செல்கிறது.

மைனஸ் :

இப்படிபட்ட போல்டான கதையை அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வி இந்த படத்தின் மிகப்பெரிய மைனஸ். மேலும், படத்தில் வரும் அரசியல் சர்ச்சைகள், நீட் தேர்வு, மீடு போன்ற விஷயங்களை நாம் பல படத்தில் பார்த்துள்ளோம். அதனை இந்த படத்திலும் பார்ப்பது கொஞ்சம் சலிப்பை தருகிறது. படத்தின் இசையமைப்பாளர் எல்லா விதமான இசையையும் ஒன்றாக இணைத்து டுயூன் போட்டது போல இருக்கிறது.

இறுதி அலசல்:

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான போது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஆனால், படக்குழுவும், அமலா பாலும் படம் வெளியான பின்னர் படத்தை பற்றி கூறுங்கள் என்றார். அதனை நிரூபிக்கும் விதமாகவே இந்த படம் இருக்கிறது என்பது தான் உண்மை. அமலா பால் படம் முழுக்க அரை நிர்வாணமாக நடித்தாலும் அதனை ஆபாசமாக பார்க்கும் எண்ணத்தை நமக்கு ஏற்படாது. மொத்தத்தில் பெண்களின் உடல் குறித்து நமக்கு இருக்கும் எண்ணத்தை இந்த படம் கண்டிப்பாக மாற்றியுள்ளது என்பது உண்மை. இது அனைவரையும் கவரும் படம் இல்லை என்றாலும் கண்டிப்பாக அனைவரும் ஒரு முறை பார்க்கவேண்டிய படம் தான்.

Advertisement