எங்க ஊர்லயாவது இண்டர்வல்ல ஓடிடுவோம். ஆனா இங்க – அமெரிக்கா தியேட்டரில் லியோ படத்தை பங்கமாக கலாய்த்த ஆதவன்.

0
552
- Advertisement -

திரையரங்கில் லியோ படத்தை விமர்சித்து நடிகர் ஆதவன் பேசிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபீசிலும் இடம் பெறும். இறுதியாக வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்களில் பெரும் தோல்வியை தழுவியது.

-விளம்பரம்-

இருப்பினும் வசூல் ரீதியாக படம் வெற்றி கண்டது. தற்போது விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது.

- Advertisement -

லியோ படம்:

தமிழகத்தில் மட்டும் 9 மணிக்கு வெளியாகி இருக்கிறது. பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் 4 மணி மற்றும் 5 மணிக்கு திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் லியோ படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் படத்தில் முதல் பாதியே தூள் கிளப்புகிறது என்றும் இரண்டாம் பாதியெல்லாம் வேற லெவல் என்றும் ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் தெறிக்க விட்டு வருகின்றனர். தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்த செய்திகள் தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

லியோ வசூல்:

மேலும், விஜய்யின் லியோ படம் உலக அளவில் முதல் நாள் 130 கோடி வசூல் செய்து இருக்கிறது. தமிழகத்தில் முதல் நாள் 73 கோடி வசூல் செய்திருக்கிறது. இத்தனைக்கும் ஸ்பெஷல் சோ எதுவும் இல்லாமலே லியோ படம் வசூல் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பின் இரண்டே நாளில் விஜயின் லியோ படம் 210 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. இனி வரும் நாட்களிலும் லியோ படம் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

ஆதவன் பேசிய வீடியோ:

இந்த நிலையில் திரையரங்கில் லியோ படத்தை விமர்சித்து நடிகர் ஆதவன் பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை கிளப்பி வருகிறது. அந்த வீடியோவில் ஆதவன், சரித்திரம்! லியோ படத்தை அமெரிக்காவில் உள்ள ஒரு திரையரங்கில் பார்க்க வந்தால் படத்தை போடாதீர்கள் நீங்கள் ஏதாவது பேசுங்கள் என்று சொல்கிறார்கள். எல்லாருக்கும் வாழ்க்கையில ஒரு அலர்ட் இருக்கும். எங்க ஊரு திரையரங்கில் இன்டர்வலுக்கு அப்புறம் பிடிக்கவில்லை என்றால் வண்டி எடுத்து ஓடி விடுவோம்.

ரசிகர்கள் கண்டனம்:

ஆனால், இங்கு எல்லோரும் உட்கார்ந்து இருக்க நான் மட்டும் எழுந்து நின்றால் என்ன பண்ணுவது. எல்லோரும் இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள். எத்தனையோ திரைப்படம் வந்திருக்கலாம். லியோ திரைப்படம் மாதிரி எதுவும் இல்லை. முதல் மூன்று ரோவில் இருப்பவர்கள் இரண்டாவது சீனிலேயே தூங்கி விடுவார்கள். அடுத்தவர்களின் நிலைமை என்று கிண்டலாக பேசி இருக்கிறார். இதை பார்த்த விஜய் ரசிகர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement