சிங்கம் 2 படம் குறித்து நடிகர் ரகுமான் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் ரகுமான். 1986 ஆம் ஆண்டு விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய நிலவே தந்தை என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், நடிகர் ரகுமான் அவர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தார்.
அதன் பின்னர் இவர் 1984ஆம் ஆண்டு மட்டும் மொத்தம் 16 மலையாள படங்களில் நடித்து அசத்தினார். பிறகு ரகுமான் அவர்கள் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். பின் சிறிய இடைவெளிக்கு பின் இவர் நடித்த துருவங்கள் பதினாறு படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. அன்றிலிருந்து இன்று வரை பல ஹிட் படங்களில் நடிக்கிறார் ரகுமான். தற்போது இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தில் மதுராந்தக சோழனாக நடித்திருக்கிறார். முதல் பாகத்தை தொடர்ந்து பொன்னியின் முதல் 2 படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது.
ரகுமான் நடித்த படங்கள்:
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இந்த படத்தின் மூலம் ரகுமானுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. இதனை தொடர்ந்தும் இவர் படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழ் சினிமா உலகில் முக்கியமாக பேசப்படும் பிரபலங்களில் ரகுமானும் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் சிங்கம் 2 படம் குறித்து ரகுமான் அளித்து இருக்கும் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இவர் சிங்கம் 2 படத்தின் மூலம் தான் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை தொடங்கினார். ஹரி-சூர்யா கூட்டணியில் வெளிவந்த படம் தான் சிங்கம்.
சிங்கம் 2 படம்:
சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிங்கம் 2 படத்தை வெளியிட்டார்கள். இந்த படத்தில் ஹன்சிகாவின் சித்தப்பாவாகவும், வில்லன் டேனியின் நண்பராகவும் ரகுமான் நடித்திருந்தார். மேலும், இந்த படம் வெளியாகி இன்றோடு பத்து ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக ரகுமான் கூறியிருப்பது, என்னுடைய சினிமா கேரியரிலையே நல்ல படங்கள் வரிசையில் சிங்கம் 2 படத்திற்கு எப்பவும் ஒரு இடம் உண்டு. அந்த படத்தின் மூலம் எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. ஆரம்பத்தில் அந்த படத்தில் வில்லனாக நடிக்க கேட்டபோது நான் தயங்கினேன். பின் சிங்கம் படம் சக்சஸ் ஆனதை அடுத்து சிங்கம் 2 படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும் என்று தோன்றியது.
நடிகர் ரகுமான் அளித்த பேட்டி:
அதற்கு பிறகு தான் நான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்த படத்தின் மூலம் தான் நான் ஹரி சாருடன் முதன் முதலாக வேலை செய்தேன். தூத்துக்குடியில் தான் படபிடிப்பு நடந்தது. அவரோட கடின உழைப்பை பார்த்து நான் பிரமித்து விட்டேன். இந்த படத்தில் அவர் அசுர வேகத்தில் உழைத்தார். தூத்துக்குடியில் அனல் பறக்கிற நேரத்தில் தான் இந்த படப்பிடிப்பு நடந்தது. அப்போதும் அவர் வேலை செய்வதை நினைத்து பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்தப் படத்தின் வெற்றிக்கு எல்லா கிரெடிட்டும் ஹரி சாருக்கு தான் கொடுக்கணும். கிளைமேக்ஸ் காட்சியில் சூர்யா உடன் மோதுவேன். என் தலைக்கு மேல் இரண்டு கம்பி வளையும் தொங்க விட்டிருந்தார்கள்.
சிங்கம் பட அனுபவம்:
நான் அந்த கம்பி வளையத்தில் ஒரு கம்பியை மட்டும் பிடித்துக் கொண்டு ஆவேசமாக பேசிக் கொண்டிருப்பேன். அந்த கம்பி ரெண்டும் நிஜமாகவே கம்பி வளையங்கள். ஆனால், சீனில் நடிக்கும் போது அதெல்லாம் நினைவுக்கு வரவில்லை. திடீரென்று இந்த கம்பியில் ஒன்று டங்கு என்று மண்டையில் வந்து மோதி விட்டது. பயங்கரமான வலி இருந்தாலும் காட்சி கண்டினியூட்டி விடாமல் நடித்து முடித்தேன். இதை பார்த்து ஹரி-சூர்யா சாருமே பதறிப் போய் விட்டார்கள். ஆனால், அந்த சீனை இன்றைக்கும் வரைக்கும் பாராட்டாதவர்களே இல்லை. மொத்தத்தில் சிங்கம் 2 படத்தை என்னால் மறக்கவே முடியாது என்று கூறினார்.