தமிழா தமிழாவில் ஸ்பெஷலாக இனி என்ன இருக்கும்? – புதிய தொகுப்பாளர் ஆவுடை பேட்டி

0
1640
Tamizha
- Advertisement -

புத்தம் புது பொலிவுடன் தமிழா தமிழா நிகழ்ச்சி குறித்த ப்ரோமோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளெல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி போல விவாத மேடையாக இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த தமிழா தமிழா நிகழ்ச்சியை இயக்குனரும் நடிகருமான கரு பழனியப்பன் தொகுத்து வழங்கி இருந்தார். இந்த நிகழ்ச்சியில் இது தரப்பினர் ஒரு தலைப்பை வைத்துக்கொண்டு விவாதம் செய்வார்கள். காரசாரமாக இந்த நிகழ்ச்சியின் விவாத மேடை இருக்கும். சமூகம் மற்றும் சமூகம் சாராத பல விஷயங்களை இந்த நிகழ்ச்சியில் பேசி தீர்வு கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

- Advertisement -

தமிழா தமிழா புதிய சீசன் :

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து தொகுப்பாளர் பழனியப்பன் விலகி விட்டார். இதனால் இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பாமல் இருக்கிறது. இந்நிலையில் தமிழா தமிழா நிகழ்ச்சியை புது தொகுப்பாளர் தொகுத்து வழங்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தற்போது பத்திரிகையாளர் ஆவுடையப்பன் மூலம் மீண்டும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான பணிகள் தான் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

ஆவுடையப்பன் பேட்டி

மேலும், இது குறித்து ஆவுடையப்பன் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, மக்களிடமிருந்து கிடைக்கும் வரவேற்பை பார்க்கும்போது இந்த நிகழ்ச்சி எவ்வளவு முக்கியமானது என்பதை என்னால் உணர முடிகிறது. இந்த நிகழ்வை ஒரு முக்கியமான பொறுப்பான நிகழ்ச்சியாக கருதுகிறேன். இந்த நிகழ்ச்சி வழங்கப்படும் தலைப்புகளை வைத்து அதை மெருகேற்றி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் எனக்கு நிறைய பொறுப்புகள் இருக்கிறது என்று நம்புகிறேன். இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம் என்ற ஆசை எனக்கு ஏற்கனவே இருந்தது. ஆனால், எனக்கு வாய்ப்பு தான் கிடைக்கவில்லை.

-விளம்பரம்-

விதிமுறைகள் எதுவும் மாற்றம் கிடையாது

தற்போது இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்கு சந்தோஷத்தை அளித்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் விதிமுறைகள் எதுவும் மாற்றம் கிடையாது. ஆனால், பிரசன்டேஷன் சிறப்பாக செய்ய முடியுமா என்று கேட்டார்கள்? அதனால் எனக்கும் வித்தியாசமாக கொண்டு போக ஐடியா வச்சிருக்கேன். நான் ஆரம்பத்தில் இருந்தே மீடியாவில் இருந்ததால் இந்த நிகழ்வு மூலம் எனக்கு ஒரு இணைப்பு பாலமாக இருக்கும் என்பது நம்புகிறேன்.

நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள இருக்கிறேன்

இது புதிது என்று எனக்கு சொல்ல முடியாது. மீடியாவில் இருப்பதினால் எனக்கு எல்லாமே ஒரு அனுபவமாக தான் இருக்கிறது. இதன் மூலம் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள இருக்கிறேன். இதில் நான் தொகுப்பாளராக பணியாற்ற போகிறேன் என்று தெரிந்தவுடன் எல்லோரும் வாழ்த்து சொன்னார்கள். பிரபல தலைவர்களுக்கு நான் ப்ரோமோ அனுப்பி இருந்தேன். அவர்கள் அதை பார்த்துவிட்டு நன்றாக செய்து உள்ளீர்கள் என்று பாராட்டி இருந்தார்கள் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement