இந்த ஒரு காரணத்தால் தான் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தேன் ! ரகசியத்தை உடைத்த அபிஷேக்

0
1030

1994 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற ஐஸ்வர்யா ராய் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் நடித்துள்ளார் . பல்வேறு பாலிவுட் நடிகர்களுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கிய இவர் பின்னர் 2007 ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பட்சனை திருமணம் செய்துகொண்டார்.

Aishwarya rai

திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் ஒரு குழந்தைக்கு தாயாக இருந்தாலும் இன்னமும் அழகு தேவதையாகவே வலம்வந்து கொண்டு தான் இருக்கிறார். மேலும் எத்தனை உலக அழகிகள் வந்தாலும் ஐஸ்வர்யா ராய் பிடித்திருக்கும் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது.

மேலும் இந்த தலைமுறை ரசிகர்களில் கூட இவரது அழகை ரசிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள் என்று ஆணித்தனமாக கூற முடியும் . இந்நிலையில் ஐஸ்வர்யா ராயின் அழகில் மயங்கி தான் அபிஷேக் பட்சன் அவரை திருமணம் செய்து கொண்டார் என பல பேர் கூறிவந்தனர். இதற்கு சமீபத்தில் பதிலளித்த அபிஷேக் பட்சன் ஐஸ்வர்யா ராயை அழகுக்காக தான் திருமணம் செய்யவில்லை,அவர் மேக் அப் இல்லாமல் கூட அழகாக தான் தெரிவார் என்றும்,அவரின் நல்ல குணத்திற்காக தான் நான் அவரை திருமணம் செய்து கொண்டேன் என்று தெரிவித்திருந்தார்.