நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் இருந்து வெளியேறினார் அமித்.! காரணம் இது தானம்.!

0
1481
Nenjam-marapthillai
- Advertisement -

சன் தொலைக்காட்சியில் 2013 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘மஹாபாரதம்’ தொடரில் நடித்து தமிழ் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் நடிகர் அமித் பார்கவ். அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை ‘ தொடரில் பிரியா பவானி ஷங்கரின் கணவராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல்தான் அமித் பார்க்கவ் அடையாளம். அதன் பின்னர் அச்சம் தவிர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றுவந்தார். விஜய் டிவி ரசிகர்களுக்கு இவர் நன்கு அறிமுகமானவர். தொடரில் நடிப்பதோடு, சினிமாவிலும் நடித்து வருகிறார் அமித் பார்கவ்.

இதையும் படியுங்க : திருமணமான கார்த்திக்கை காதலிக்கிறாரா செம்பருத்தி தொடர் நடிகை ஷபானா..!அவரே சொன்ன ரகசியம்..!

- Advertisement -

தற்போது விஜய் டிவியில் இவர் ‘நெஞ்சம் மறப்பதில்லை’என்ற தொடரில் நடித்து வந்தார். இந்நிலையில் அந்த சீரியலில் இருந்து அமித் விலகுவதாக சமீபத்தில் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சீரியலை தாண்டி அடுத்த கட்டத்திற்கு வாழ்க்கையில் செல்ல வேண்டும் என்பதால் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளாராம்.

ஏர்கனவே இந்த சீரியலில் முக்கிய கதாபாத்தியதில் நடித்து வந்த பிக் பாஸ் புகழ் கணேஷ் வெங்கட் ராமன் மனைவி நிஷா இந்த தொடரில் அவரது கதாபாத்திரம் வேறு மாதிரியாக செல்வதால் விலகிவிட்டதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Advertisement