எனக்கும் அது தெரியும் – உருவக் கேலிகளுக்கு பதிலடி கொடுத்த ராட்சசன் பட அம்மு அபிராமி

0
540
Ammu
- Advertisement -

பாடி ஷேமிங் குறித்து நடிகை அம்மு அபிராமி ஓபனாக கூறியிருக்கும் கருத்து தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக அம்மு அபிராமி இருக்கிறார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் இளம் நடிகையான அம்மு அபிராமி. நடிகை அபிராமி 2017 ஆம் ஆண்டு வெளியான ‘என் ஆளோட செருப்ப காணோம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற திரைப்படத்தில் கார்த்தியின் தங்கையாக நடித்து இருந்தார். ஆனால், இவர் மக்கள் மத்தியில் பிரபலமானது “ராட்சசன்” படத்தில் தான். அதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் அவர்கள் நடிப்பில் வந்த அசுரன் படத்தில் நடிகை அம்மு அபிராமி நடித்திருந்தார். இந்த படத்தில் தனுஷின் பிளாஷ் பேக் காட்சியில் மாரியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் தனுஷுக்கு நிகராக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் நடிகை அம்மு அபிராமி. இதனை தொடர்ந்து பல படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

அம்மு அபிராமி குறித்த தகவல்:

இறுதியாக அருண் விஜய் நடிப்பில் வெளியான யானை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதனை அடுத்து விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் அம்மு அபிராமி போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடியிருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் இரண்டாவது இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார். தற்போது இவர் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் குதூகலம், கனவு மெய்பட போன்ற சில படங்களில் கமீட் ஆகி நடித்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அம்மு அபிராமி பாடி ஷேமிங் குறித்து வெளிப்படையாக பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

அம்மு அபிராமி பதிவு:

அதில் அவர், ‘ஹாய் டியர் இன்ஸ்டா நண்பர்களே. நான் ஒரு சென்சிடிவான டாப்பிக் குறித்து பேச விரும்புகிறேன். சமீப காலமாக நான் உடல் எடை அதிரித்துவிட்டேன். அது எனக்கு தெரியும். அதற்காக வொர்க்கவுட்டும் செய்து வருகிறேன். இதை எனக்காகவும் என் சொந்த சந்தோஷத்திற்காகவும் மட்டும் செய்து வருகிறேன்’. பல பேர் என்னுடைய உடல் எடை அதிகரித்தது குறித்து கமெண்ட் செய்து வருவதை பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் உடல் மாற்றம் குறித்து அவர்கள் சொல்லி தருவது வேடிக்கையாக இருக்கிறது. அவர்களுக்கு தேவையே இல்லாத விஷயத்திற்காக வாழ்க்கையின் நேரத்தை ஒதுக்கி கமெண்ட் செய்வதை சரி என்று நினைக்கின்றனர்.

பாடி ஷேமிங் குறித்து சொன்னது:

உண்மையாகவே என் மீது அக்கறை கொண்டு யாராவது கமெண்ட் செய்திருந்தால் என்னை தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அவர்களுக்கு நன்றி. ஆனால், சிலர் கமெண்ட் செய்யவேண்டும் என்பதற்காகவே செய்கின்றனர். எனக்கு 16 வயது இருக்கும் போது நான் சினிமாவில் நுழைந்தேன். அப்போது என் மார்பகங்களை பெரிதாக காட்ட பாடட்(padded) பிராக்களை போட சொன்னார்கள்.அதை நான் மறுத்துவிட்டேன்.எனக்கு 18 வயது இருக்கும் போது நான் குண்டாக இருக்கிறேன். டயட்டில் இருக்க வேண்டும் என்று கூறினார்கள். அது எனக்கு கஷ்டமாக இருந்தது.

உருவகேலி குறித்து சொன்னது:

உருவக்கேலி, எனது உடலை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பவது, என்னை நானே வெறுத்துக்கொண்டு, இப்படியே வருடங்கள் ஓடியது. பெண்களாகிய நமக்கு ஒவ்வொரு நாளும் நாம் எப்படி இருக்கிறோம் என்பது பற்றிய விமர்சனங்களை பெற்று வருகிறோம். ஒருவர் எப்படி பட்ட கஷ்டத்தை அனுபவிக்கிறார் என்பது நமக்கு எப்பவும் தெரியாது. தெரியாமல் செய்யும் அல்லது சொல்லும் சில விஷயங்கள் அவர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே நீங்கள் பேசுவதற்கு முன்பு யோசியுங்கள். முக்கியமாக நீங்கள் ஒரு ஆன்லைன் புல்லியாக இருந்தால் உங்களுடையை வாழ்க்கையை வாழுங்கள் என்று கூறி இருக்கிறார்.

Advertisement