என் பின்னால் கையை வைத்து தடவினார்..!நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..!

0
306
Arjun

தமிழ் சினிமாவில் #metoo மொமென்ட் பெரும் சர்சையையை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நடிகைகள் தங்களிடம் தவறாக நடந்துகொண்ட பிரபலங்களின் பெயர்களை #mettoவில் தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் நடிகர் அர்ஜுனுடன் “நிபுணன்” படத்தில் நடித்த ஸ்ருதி ஹரிஹரன், படப்பிடிப்பின் போது நடிகர் அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ட்விட்டர் பக்கத்தில் திடுக்கிடும் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Shruthi arjun

sruthi-hariharan

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகை ஸ்ருதி ஹரிஹரன்,#metoo மொமென்ட் கண்டிப்பாக அணைத்து துறைகளிலும் இருக்கும் அழுக்கை சுத்தம் செய்யும் என்று நம்புகிறேன். metoo வாள் பல்வேறு அரக்கர்களின் பெயர்களும் வெளியாகி வருகிறது. இம்முறை நானும் எனது மௌனத்தை கலைக்கிறேன்.

நான் முதல் முதலில் திரை துறைக்கு வரும் போது அதிக விஷயங்களையும், அனுபவங்களையும் கற்றுக்கொள்ளலாம் என்று தான் நினைத்தேன். ஆனால், தற்போது எனக்கு திரை துறையில் மேல் இருக்கும் அதிருப்தியோடு இதை எழுதுகிறேன்.

கடந்த 2016 ஆம் அர்ஜூனுடன் நான் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது அவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட் காட்சி ஒன்றில் கண்டுபிடிக்கும் காட்சி அமைந்திருந்தது.

அந்த காட்சியில் அவர் என்னை வேண்டுமென்றே இறுக்கமாக கட்டி பிடித்து என் பின் பக்கத்தில் அங்கும் இங்கும் தடவினார். அத்தோடு இயக்குனரிடம் இதைவிட நெருக்கமான காட்சி ஒன்றை வைக்கலாமா என்றும் கேட்டார்.பின்னர் அந்த காட்சியிலும் நான் விருப்பமில்லாமல் நடித்தேன்.

இந்த சம்பவம் நடந்த போது அங்கேய 50 பேர் நின்றுகொண்டிருந்தார்கள் ஆனால் அப்போது நான் சகித்துக்கொள்வதை விட ஒன்றும் செய்ய முடியவில்லை. அர்ஜுன் ஒரு பெரிய நடிகர் என்பதால் அவர் மிகவும் கவனமாகவே இதையெல்லாம் கையாளுகிறார். அவர் நேரடியாக தொல்லைகள் தரவில்லை என்றாலும் அவருடன் நடிக்கும் போது அசவ்கரியமான உணர்வை தான் எனக்கு ஏற்படுத்தினார். இதெயெல்லாம் அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.