சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் “2.0” விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் “பேட்ட” படத்தில் நடித்து வருகிறார்.
#PettaParak@rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @VijaySethuOffl @SimranbaggaOffc @trishtrashers pic.twitter.com/M8SL4LLiWG
— Sun Pictures (@sunpictures) October 20, 2018
விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன் போன்ற நடிகர்கள் பட்டாளம் நடித்து வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் பி[போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற சூப்பர் ஸ்டாரிடம், ‘பேட்ட’ படத்தில் இருந்து எதாவது வசனத்தை பேசுங்கள் என்று கேட்டதற்கு ரஜினி “பேட்ட பராக்” என்று கூறிவிட்டு விடைபெற்றார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.