பிரபல நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா இன்று (மார்ச் 29) உடல் நல குறைவால் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரைப்படங்களில் நடிகையாகவும், நாட்டுப்புற பாடகியாகவும் திகழ்ந்து விளங்கியவர் பறவை முனியம்மா. இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள பரவை என்னும் ஊரை சேர்ந்தவர். அதனால் தான் இவரை ‘பரவை முனியம்மா’ என்று அழைக்கிறார்கள். இவர் தமிழ் சினிமா உலகிற்கு விக்ரம் நடிப்பில் வெளிவந்த “தூள்” எனும் படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.பின்னர் காதல் சடுகுடு, பூ, தேவதையை கண்டேன் என 25 திரைப்படங்களுக்கு மேல் குணச்சித்திர நடிகையாகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார்.
புகழின் உச்சியில் இருந்த பரவை முனியம்மா வயது முதிர்ந்த நிலையில் நோய் காரணமாக வறுமையில் வாடி இருந்தார் .பரவை முனியம்மா ஒரு ஏழ்மை குடும்பத்தை சார்ந்தவர். இவருடைய வறுமையை கண்டு மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா அவர்கள் ஆறு லட்சம் ரூபாய்யை நிதி உதவியும், குடும்பச் செலவுக்காக மாதம், மாதம் ஆறாயிரம் ரூபாயும் கொடுத்து இருந்தார். அது மட்டுமில்லாமல் மாதாந்திர மருத்துவமனை செலவிற்கு டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து வழங்க ஆணையிட்டுள்ளார்.பரவை முனியம்மாக்காக இப்படி பல உதவிகளைச் செய்துள்ளார்.
இவர்களுக்கு மாற்று திறனாளி மகனும் உள்ளார். இடையில் பரவை முனியம்மாவிற்கு உடல் நிலை மோசமான போது நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சென்று பண உதவி அளித்தார். அதே போல மீண்டும் உடல் நல குறைவால் பரவை முனியம்மா அவதிப்பட்ட போது நடிகர் அபி சரவணன் அவரை மருத்துவமனையில் சேர்த்து, உடல்நிலை சரியாகும் வரை அவரை கவனித்துக்கொண்டார். பரவை முனியம்மாவை நேரில் சந்தித்து ஆறுதல் மட்டும் கூறாமல் அவரது நிலையைக் கண்டு மனம் வருந்தி உள்ள அபி சரவணன் தனது கையிலிருந்த எட்டாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு வந்தார்.
பரவை முனியம்மாவின் சிகிச்சைக்கு ஆகும் செலவு தானே ஏற்றுக் கொண்டதாகவும் கூறி இருந்தார். அபி சரவணன். தொடர் சிகிச்சை மூலம் பறவை முனியம்மா உடல் நலம் தேறி வருவதாகவும் அவ்வப்போது தனது முகநூல் பக்கத்தில் பறவை முனியம்மா குறித்து பதிவிட்டிருந்தார். மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன் அபி சரவணன் – வெண்பா நடிப்பில் வெளியான , ‘மாயநதி’ படத்தை அபி சரவணன் குடும்பத்தினருடன் சேர்ந்து மதுரையில் பார்த்தார் பரவை முனியம்மா. நீண்ட நாட்கள் கழித்து தியேட்டரில் படம் பார்த்த அனுபவம் மனதுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் இருந்ததாக தெரிவித்தார்.
இந்த நிலையில் பரவை முனியம்மாவிற்கு இறுதி காலத்தில் உதவியாக இருந்த நடிகர் அபி சரவணன் தான். தற்போது பரவை முனியம்மா இறப்பின் போதும் இறுதி வரை கூட இருந்து பரவை முனியம்மாவின் உடல் மயானத்தில் தகனம் செய்யும் வரை கூட இருந்துள்ளார். மேலும், பறவை முனியம்மாவின் மாற்றுத்திறனாளி மகன் அபி சரவணனை கட்டி பிடித்து அழுத சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்தியுது. அந்த மனதை உருக்கும் புகைப்படங்கள் இதோ.