நீண்ட நாள் காத்திருந்த வலிமை படம் ரிலீஸ்- விமர்சனம் இதோ

0
802
- Advertisement -

நீண்ட நாள்கள் எதிர்பார்த்து இருந்த வலிமை படம் இன்று ரிலீசாகி இருக்கிறது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜித் இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். ஒட்டுமொத்தச் இந்திய சினிமாவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த வலிமை படம் இன்று வெளியாகியுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைகளம்:

சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் செயின் பறிப்பு, போதைப் பொருள் கடத்தல், கொலை என பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸ் அதிகாரிகளால் கூட கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இவர்கள் செய்யும் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இன்னொரு பக்கம் அஜித் அசிஸ்டன்ட் கமிஷனர் அர்ஜுனனாக இருக்கிறார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் மதுரையில் வசித்து வருகிறார். தன்னுடைய தம்பி மற்றும் அண்ணனின் நடவடிக்கை காரணமாக சென்னைக்கு குடும்பத்துடன் இடம் பெயர்கிறார். மேலும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரியாக ஹுமா குரேஷி வருகிறார்.

- Advertisement -

அஜித் – ஹுமா குரேஷி காட்சிகள்:

அப்போது அஜித்தும், ஹுமா குரேஷியும் இணைந்து சென்னையில் நடக்கும் கொலை ஒன்றை விசாரிக்க தொடங்குகிறார்கள். அப்போது விசாரணையின் போது சென்னையில் நடக்கும் அனைத்து குற்றங்களும் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்களால் தான் நடத்தப்படுகிறது என்பது அஜித்துக்கு தெரிய வருகிறது. அதுமட்டும் இல்லாமல் Satan Slave தலைவராக இருந்து இத்தனை நாட்கள் அனைத்து குற்றங்களையும் முகம் காட்டாமல் பின்னாலிருந்து செயல்படுத்தி வருபவர் கார்த்திகேயா என்பது தெரிய வருகிறது. பின் வில்லனை அஜித் தனது அதிரடி நடவடிக்கையால் பிடிக்கிறார்.

வில்லனை பிடிக்கும் அஜித்:

அதேசமயம் அஜித்தின் தம்பி Satan Slave குழுவை சேர்ந்தவர் என்பது தெரிய வருகிறது. கடைசியில் அஜீத் வில்லன் கார்த்திகேயா திட்டத்தை எப்படி உடைக்கிறார்? தன் தம்பியை Satan Slave குழுவிடமிருந்து அஜித் எப்படி மீட்கிறார்? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை அஜித் மிரட்டியிருக்கிறார் என்றே சொல்லலாம். பல நாட்கள் கழித்து திரையில் பார்க்கும் ரசிகர்களுக்கு அஜித்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் மெய்சிலிர்க்க வைத்து இருக்கிறது. மேலும், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஹுமா குரேஷி நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

படத்தின் நடிகர்களின் கதாபாத்திரம்:

ஆண்களுக்கு இணையான ஆக்சன் காட்சிகளில் ஹுமா குரேஷி மாஸ் காட்டியிருப்பது திரையரங்கில் கிளாப்ஸ் வாங்கியிருக்கிறது. வில்லனாக தமிழ் சினிமாவிற்கு கார்த்திகேயா அறிமுகமாகிறார். தமிழில் முதல் படமாக இருந்தாலும் கார்த்திகேயா வில்லத்தனத்தில் அசத்தியிருக்கிறார். மேலும், படத்தில் நடித்துள்ள பிற நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களை கச்சிதமாக செய்துள்ளார்கள். ஆரம்பத்திலேயே நடக்கும் குற்றங்களை காட்சிப்படுத்தும் விதத்தில் இயக்குனர் வினோத் தன்னுடைய ஸ்டைலில் அதிர வைத்து காண்பித்திருக்கிறார்.

படத்தின் முதல் பாதி:

அப்போதிலிருந்தே தொடங்கும் முதல் பாதி டாப் கியரில் விறுவிறுப்பாக செல்கிறது. இன்டர்வெல் வரை கூட எந்த ஒரு சலிப்பும் தட்டவில்லை. அந்த அளவிற்கு அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் காட்டப்படுகிறது. இரண்டாம் பாதி அஜித்திற்கு உரிய பாணியில் படம் செல்கிறது. அதோடு இரண்டாம் பாதியில் சில இடங்களில் பொறுமையை சோதித்தாலும் ஃபேமிலி சென்டிமென்ட் பாசம் என்று செல்கிறது. அதிலும் படத்தில் பஸ் பைட் தமிழ் சினிமாவிலேயே ஒரு மைல்கல் காட்சி என்று சொல்லலாம்.

படத்தில் இயக்குனர் செய்த வேலை:

அந்த அளவிற்கு இயக்குனர் மிரட்டி இருக்கிறார். படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் திலீப் மாஸ்டர் ஸ்டண்ட் வேற லெவலில் செய்து இருக்கிறார். படத்திற்கு ஒளிப்பதிவு பக்கபலமாக அமைந்திருக்கிறது. இதற்காகவே தனி விருது கூட கிடைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. நீண்ட நாள் காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு முழு பேக்கேஜாக வலிமை அமைந்திருக்கிறது.

valimai

பிளஸ்:

படத்தின் முதல் பாதி பயங்கர விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

சண்டை காட்சிகள் அனைத்தும் ஹாலிவுட் ஸ்டைலில் மிரட்டி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு, டெக்னிக்கல் ஒர்க் என அனைத்தும் வேற லெவலில் உள்ளது.

படத்தின் மொத்த படத்தையும் அஜித் தாங்கிப் பிடித்திருக்கிறார் என்று சொல்லலாம்.

ஆண்களுக்கு இணையான ஆக்சன் காட்சிகளில் ஹீமா மாஸ் காட்டியிருக்கிறார்.

மைனஸ்:

இரண்டாம் பாதி இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்திருக்கலாம்.

சென்டிமென்ட் காட்சிகள் தான் ஒட்டவில்லை என்று கூறப்படுகிறது.

மொத்தத்தில் வலிமை படம் – ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் படமாக இருக்கிறது.

Advertisement