அஜித்திற்கு உதவி செய்த ரசிகர்கள்..!ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய அஜித்..!

0
175
Ajith

கடந்த சில நாட்களாகவே நடிகர் அஜித்துடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது உலா வருகிறது.

அதே போல சில நாட்களுக்கு முன்னரும் நடிகர் அஜித் “விஸ்வாசம் ” படத்தின் டப்பிங் வேலையங்களை முடித்து விட்டு அதிகாலையில் வீடு திரும்பியபோது  அங்கே ரசிகர்கள் இருப்பதை கண்டு அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

இந்நிலையில் சமீபத்தில் “விசுவாசம்” படத்தின் படப்பிடிப்பிற்காக இன்று அதிகாலை அவரது வீட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்த விடயத்தை அறிந்த அஜித் ரசிகர்கள் அஜித்தின் காரை பின் தொடர்ந்துள்ளனர்.

அஜித்துடன் எப்படியாவது புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியாதா என்று அவரை விமான நிலையம் வரை பின் தொடர்ந்துள்ளனர். பின்னர் விமான நிலையத்தினுள் சென்ற போது அவரது சூட் கேஸ் படியில் மாட்டிக்கொண்டுள்ளது.

உடனே அஜித்தின் ரசிகர் ஒருவர் அத்தனை எடுத்து உதவி செய்துள்ளார். பின்னர் அஜித்திடம் ரசிகர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்க முதலில் மறுத்த அஜித் பின்னர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.