என்னடி முனியம்மா பாடல் புகழ் TKS நடராஜன் காலமானார் – அவரின் இந்த காமடியை மறக்க முடியுமா ?

0
13402
tsk
- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டும் சரி, இந்த ஆண்டும் சரி ஒரு போறாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் எத்தனையோ ஜாம்பவான்களின் எதிர்பாராத இழப்பு திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியது. சமீபத்தில் கூட பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் காலமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இப்படி ஒரு நிலையில் தமிழ் சினிமாவில் பாடகராகவும் நடிகராகவும் திகழ்ந்து வந்த TKS நடராஜன் இன்று காலமாகி இருக்கிறார்.

-விளம்பரம்-

1954ம் ஆண்டு வெளியான ரத்தபாசம் படம் மூலம் நடிகரான நடராஜன் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், கமல் ஹாசன், கார்த்திக் என்று பல ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்தவர். சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களை தன்னை கவனிக்கச் செய்தவர். தற்போது 87 வயதாகும் இவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதையும் பாருங்க : பறிபோன ஹீரோ வாய்ப்பு – அஸ்வின் வாய்ப்பை பறித்த வாரிசு நடிகர். யார் தெரியுமா ?

- Advertisement -

இவர் தனது 15 வயதில் நாடாக கலைஞராக கலைத்துறையில் தனது பயணத்தை ஆரம்பித்தார். 15 வயதில் துவங்கி நாடகம், சினிமா, நாட்டுப்புற பாடல் என்று தனது பயணத்தை பல ஆண்டுகள் தொடர்ந்த இவர் ரஜினி, கமல், விஜயகாந்த் என்று பல்வேறு படங்களில் நடித்துவிட்டார். அதே போல கௌண்டமணியின் பல காமெடிகளில் இவர் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

அதிலும் கௌண்டமணியிடம் ஒரு படத்தில் 100 வருஷம் வாழ வேண்டும் என்று இவர் யோசனை கேட்கும் காட்சி ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பிரபலம் தான். மேலும், இவர் நாட்டுபுற பாடகரும் கூட, இதுவரை 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சினிமாவில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக இவர் பாடிய என்னடி முனியம்மா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.

-விளம்பரம்-
Advertisement