பிரபல நடிகரும், இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியுமான பாலா கைது செய்யப்பட்டு இருக்கும் செய்தி தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் பாலா. இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த 'அன்பு' என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். அதன் பின் இவர் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

அதை அடுத்து சில காலமாக இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் பெரிய அளவில் கிடைக்கவில்லை. அதனால், இவர் மலையாள மொழிக்குச் சென்றுவிட்டார். பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் அஜித்தின் 'வீரம்' படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். இருந்தும் இவரால் தொடர்ந்து தமிழ் மொழி படங்களில் நடிக்க முடியவில்லை. தற்போது இவர் மலையாள படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அதோடு இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியும் அவர்.
பாலா குறித்து:
இதனிடையே நடிகர் பாலா கேரளாவை சேர்ந்த பிரபல பாடகி அம்ருதாவை கடந்த 2010 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா என்ற மகளும் இருக்கிறார். பின் சில காரணங்களால் 2019 ஆம் ஆண்டு அம்ருதாவை விவாகரத்து செய்தார். பின் மருத்துவரான எலிசபெத் என்பவரை பாலா திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் இவர்களுக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்று செய்திகள் வந்தது. இதற்கு இடையே பாலா கொடுத்த சில பேட்டிகளில் மகள் அவந்திகா குறித்து பேசி இருந்தார்.
பாலா மகள் வீடியோ:
அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் பாலாவின் மகள் அவந்திகா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், என்னுடைய அப்பா என்னை ரொம்ப நேசிப்பதாகவும், என்னை மிஸ் செய்வதாகவும், எனக்கு நிறைய பரிசு பொருட்களை வாங்கி தந்ததாகவும் பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். ஆனால், அதில் எதுவுமே உண்மை கிடையாது. அவரை நினைக்கும் போது, அவர் குடித்துவிட்டு என்னையும் என் அம்மாவையும் செய்த கொடுமை தான் ஞாபகம் வருகிறது. என்னுடைய குடும்பத்தினர் என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள். தயவு செய்து என் வாழ்க்கையில் குறிக்கிடாதீர்கள் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
https://www.youtube.com/watch?v=xJC5xlvMSEY
பாலா வீடியோ:
அதனைத் தொடர்ந்து பாலா வெளியிட்ட வீடியோவில், மகளே முதலில் என்னை அப்பா என்று அழைத்ததற்கு நன்றி. நான் உன்னுடன் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை. ஒருவர் மகளுடன் வாக்குவாதம் செய்தால் அவன் மனிதனே கிடையாது. நான் உன் வாழ்க்கையில் குறிக்கிட மாட்டேன். நீ 5 மாத கருவாக வயிற்றில் இருக்கும் போதே, நான் உனக்கு அவந்திகா என பெயர் வைத்து அழகு பார்த்தேன். உன் சின்ன சின்ன அசைவுகளை நான் ரசித்து மகிழ்ந்தேன். நீ எப்போதுமே எனக்கு குழந்தைதான் என்று உருக்கமாக பேசியிருந்தார்.
https://www.youtube.com/watch?v=0Wn220es0ew
பாலா கைது:
இந்நிலையில் தற்போது பாலாவின் முன்னாள் மனைவி அம்ருதா அளித்த புகாரில், பாலா என்னையும், என்னுடைய மகளையும் வழி மறித்து துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார். ஆகையால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதனை அடுத்து கடவந்திரா காவல்துறை, எடப்பள்ளியில் உள்ள பாலாவின் வீட்டில் வைத்து அவரை கைது செய்து இருக்கின்றனர். போலீசார் தரப்பில் அவரை இன்று மாலை நீதிமன்ற காவலில் ஆஜர் படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.






