பட்டம் பெற்ற மகன், தோலுக்கு மேல் வளர்ந்த மகள் – அரவிந்த் சாமியின் பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா ?

0
1783
aravind
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரசாந்த், அப்பாஸ், மாதவன் என்று எத்தனையோ நடிகர்கள் சாக்லேட் பாய் என்ற அந்தஸ்தை பெற்றாலும் இதற்கு பொருத்தமான முதல் ஆள் யார் என்றால் அது அரவிந்த் சாமி தான். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் அரவிந்த்சாமி. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர், அதன்பின்னர் பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். சாக்லேட் பாய் தோற்றத்தினால் இவரால் சினிமாவில் ஹீரோவாக தொடர்ந்து நிற்க முடியவில்லை. பின்னர் சில ஆண்டுகள் கழித்து சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்சை துவங்கினார்.

-விளம்பரம்-
Image

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் இவர் நடித்த பல்வேறு படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. குறிப்பாக தனி ஒருவன், செக்கசிவந்தவானம் போன்ற திரைப்படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும், இந்த வயதிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக மாற்றினார் அரவிந்த்சாமி. இந்தநிலையில் தலைவி படத்திற்காக எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிக்கும் அரவிந்த்சாமி மீண்டும் கெட்டப்பை மாற்றி உள்ளார்.

- Advertisement -

தற்போது 50 வயதாகும் அரவிந்த் சாமி இந்த காலகட்டத்திலும் பல ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் மிகவும் ஸ்மார்ட்டாக இருக்கிறார். கடந்த ஆண்டில் மாட்டும் தமிழில் 4 படங்களில் நடித்துள்ள அரவிந்த் சாமி தலைவி படத்தில் எம் ஜி ஆர் கெட்டப்பில் அசத்தியுள்ளார். அரவிந்த்சாமிக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர் அதில் முதல் மனைவியை 2010 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டு இரண்டாம் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.

இருப்பினும் முதல் மனைவிக்கு பிறந்த இரண்டு பிள்ளைகளான ஆதிரா மற்றும் ருத்திரா அகியோர்களை தன்னுடனே வைத்துக்கொண்டுள்ளார்.நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது ஓய்வான நேரத்தை தனது பிள்ளைகளுடன் செலவழித்து வருகிறார் அரவிந்தசாமி. இவரது மகன் ஆதிரா International Baccalaureate எனப்படும் டிப்ளமோ படிப்பை முடித்து பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement