உடற்பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் போது பப்லுவின் உடல் மீது வெய்ட் விழுந்துள்ள சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து வருபவர் பிரித்திவிராஜ். இவரை பெரும்பாலும் பப்லு என்று தான் அழைப்பார்கள். தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியலில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமா உலகில் ஜாம்பவானாக திகழ்ந்த நடிகர் எம் ஜி ஆர், சிவாஜி கணேசன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பிரிதிவிராஜ்.
இவர் சினிமா உலகிற்கு வந்து நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகி உள்ளது. மேலும், பல்வேரு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள பப்லு தமிழில் இவர் மர்மதேசன், அரசி, வாணி ராணி போன்ற பல்வேரு தொடர்களில் நடித்து இருக்கிறார். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே தொடரில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது இவருக்கு 55 வயதாகிறது.
இதையும் பாருங்க : தள்ளிப்போன ‘என்ன சொல்ல போகிறாய்’ ரிலீஸ் – அஸ்வினின் பேச்சு காரணமா ? இன்னும் இத்தனை மாசம் வெளியாவது சந்தேகம் தான்.
ஆனால், இந்த வயதிலும் தனது உடலை படு பிட்டாக வைத்து இருக்கிறார் பப்லு. மேலும், வரும் ரியாஸ் காணும்ஜிம் பார்ட்னர்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட இவர் நிகழ்ச்சி ஒன்றில் சட்டையை கழட்டி தன் உடல் அமைப்பை காட்டிய வீடியோ பெரும் வைரலாக பரவியது.இந்த நிலையில் சமீபத்தில் இவரது வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
சமீபத்தில் நடிகர் பப்லு, உடற் பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் மீது முழு ராடும் பிளேட்டுடன் தவறி விழுந்துள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் போது கோவில் படத்தில் வடிவேலு பளு தூக்கும் போது இப்போ விடற பாப்போம் என்று சொல்லும் காட்சி நினைவிற்கு வருகிறது. ஆனால், பப்லுவிற்கு பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை என்று கூறப்படுகிறது.