ஆப்ரேஷன்ல நான் பிழைக்கமாக போயிட்டா நீ வேற கல்யாணம் பண்ணிக்கோ – வீரம் பட நடிகரின் கலங்க வைக்கும் வீடியோ.

0
1011
Bala
- Advertisement -

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியும் நடிகருமான பாலா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் சமயத்தில் தான் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ஓன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் பாலா. இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த அன்பு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர்.

-விளம்பரம்-

பின் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இவருக்கு இந்த படங்களை விட நடிகை அஜித்துடன் நடித்த படம் அதிக பிரபலத்தை கொடுத்தது. ஆனால் அதற்கு பிறகு சில காலமாக இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் பெரிய அளவு இல்லை. இதனால் இவர் மலையாள மொழிக்கு சென்று விட்டார்.

- Advertisement -

முதல் திருமணம் :

இந்த நிலையில் நடிகர் பாலா கேரளாவை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி அம்ருதாவை பல காலமாக காதலித்து வந்தார். பின்னர் இவர்கள் இருவரும் 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு அவந்திகா என்ற ஒரு மகள் இருக்கிறார்.இவர்களுடைய மணவாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருக்கும் போது அம்ருதா தனியாக இசைக்குழு ஆரம்பித்த பின்னர் தான் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிய வந்தது.

இரண்டாம் திருமணம் :

சில வருடங்களாகவே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. பின் 2015 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்து தான் வாழ்ந்து வந்தார்கள்.இவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கில் இவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு விவாகரத்து கிடைத்தது. இப்படி ஒரு நிலையில் கேரளாவை சேர்ந்த எலிசபெத் என்ற மருத்துவரை நடிகர் பாலா, ரகசியமாக இரண்டாம் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடதக்கது.

-விளம்பரம்-

கல்லீரல் பாதிப்பு :

இந்த நிலையில், நடிகர் பாலா கல்லீரல் பாதிப்பு தொடர்பான நோய் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாலாவுக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் ஊயிர் பிழைப்பது மிகவும் கடினம் என்று மருத்துவர்கள் தெரிவித்தாக சமீபத்தில் தகவல் ஓன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடக்க போகும் பெரிய அறுவை சிகிச்சை :

இப்படியொரு நிலையில் நடிகர் பாலா அவரது மனைவி தங்களுடைய இரண்டாவது திருமணம் ஆண்டை கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். மேலும் இன்னும் சில நாட்களில் பெரிய அறுவை சிகிச்சை இருப்பதாகவும் அந்த சிகிச்சையினால் மரணம் கூட நிகழ வாய்ப்பு இருப்பதாகவும், தனக்காக இதனை காலம் பிராத்தனை செய்து வந்த தன்னுடைய ரசிகர்களுக்கும், நன்பர்களுக்கும் நன்றிகள் என்று கூறினார். மேலும் தான் இறந்து விட்டால் இரண்டாவது திருமணம் செய்து கொள் என்று பாலா அவருடைய மனைவியிடம் தெரிவித்தார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து ரசிகர்கள் பலரும் நடிகர் பாலாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Advertisement