பிகில் படத்தை பார்த்து மகன் செய்த விஷயம் – குட்டி தளபதி ரசிகர் என்று குயூட் வீடியோவை பதிவிட்ட பரத்.

0
4720
bharath

தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் பரத். இவர் நடிப்பு மட்டுமில்லாமல் நடன திறமையும் கொண்டவர். நடிகர் பரத் அவர்கள் பாய்ஸ் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் . இதனை தொடர்ந்து காதல், எம்டன் மகன், வெயில், பழனி, கண்டேன் காதலை உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். சில வருடங்களாகவே இவருடைய படங்கள் எல்லாம் தோல்வியில் முடிந்து வந்தது.

இதனால் நடிகர் பரத் அவர்கள் ரொம்ப மன வேதனையில் இருந்தார். ஆனால், சமீபத்தில் இவர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் நடித்த படம் “காளிதாஸ்” நல்ல வெற்றியை கண்டது. இந்த படத்தில் பரத் அவர்கள் காவல்துறை அதிகாரியாக நடித்துஇருந்தார். மேலும், ஆக்ஷன், திரில்லர், பாணியில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்ற இந்த படத்தின் வெற்றி விழாவில் கண் கலங்கினார் பரத்.

- Advertisement -

நடிகர் பரத்திற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு தான் இரட்டை குழந்தைகள் பிறந்தது. இந்த நிலையில் நடிகர் பரத்தின் மகன் தீவிர விஜய் ரசிகர் என்று நடிகர் பரத் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘பிகில்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும், இந்த படம் 300 கோடிக்கு மேல் வசூலில் சாதனையையும் படைத்தது. இந்த நிலையில் இந்த படம் சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒளிபரப்பானது. இந்த படத்தின் காட்சியை பார்த்து கொண்டிருக்கும் தனது மகனின் வீடியோ ஒன்றை பதிவிட்டு தளபதியின் குட்டி ரசிகர் என்று படவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement