காமெடி நடிகர் போண்டா மணி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி – என்ன ஆனது ?

0
511
bonda
- Advertisement -

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் போண்டா மணி. இவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர். சொந்த ஊர் இலங்கையில் உள்ள மன்னார் பகுதி. இவருடைய உண்மையான பெயர் கேதீஸ்வரன். உள்ளார். அங்கு இவர் மறுமலர்ச்சி விநாயகர் கலா மன்றம் என்ற ஒன்றை தன்னுடைய நண்பர்களுடன் நடத்தி வருகிறார்.

-விளம்பரம்-

இவர் பத்தாவது வரை தான் படித்திருக்கிறார் .அதற்குப் பின் இவர் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். எப்படியாவது தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை கனவுடன் இருந்தவர். மேலும், இவர் சிங்கப்பூரில் பணி புரிந்தபோது ஒரு நிகழ்ச்சிக்காக அந்நாட்டுக்கு சென்ற இயக்குனர் பாக்யராஜை சந்தித்து சினிமா வாய்ப்பு கேட்டிருக்கிறார் மணி. அதற்குப் அவர் இந்தியாவிற்கு வாருங்கள் வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லி இருந்தார். பின் போண்டாமணி இந்தியாவிற்கு வந்தார்.

- Advertisement -

போண்டா மணி திரைப்பயணம்:

ஆனாலும், ஆரம்பத்தில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்க வில்லை. இதனால் இவர் தன்னுடைய சொந்த நாட்டிற்கே சென்று விட்டார். அப்போது இலங்கையில் பிரச்சனைகள் நடந்து கொண்டிருந்ததால் இவர்கள் அகதிகளாக ராமேஸ்வரத்திற்கு வந்திருந்தார்கள். அதற்குப் பிறகு இவரை சென்னையிலேயே வேலை பார்த்துக் கொண்டிருந்தார். பின் பல போராட்டங்களுக்கு பிறகு பாக்யராஜ் சந்திப்பு போண்டா மணிக்கு கிடைத்து இருந்தது.

போண்டா மணி நடித்த படங்கள்:

அதன் பின் இவர் 1991ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளியாகி இருந்த பவுனு பவுனு தான் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். குறிப்பாக சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம், ஜில்லா போன்ற பல படங்களில் இவருடைய நடிப்பு மக்கள் மத்தியில் கவனிக்கப்பட்டது. மேலும், 2019ஆம் ஆண்டு வெளியான தனிமை படத்திலும் இவர் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

போண்டா மணி குடும்பம்:

மேலும், வடிவேலு, விவேக் உள்ளிட்ட பல காமெடி சம்பவங்களுடன் இவர் சேர்ந்து நடித்திருக்கிறார். தற்போது இவர் தனுஷ், விஜய் சேதுபதி படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இதுவரை வரை 270 க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் துணை வேடங்களில் நடித்து இருக்கிறார். இதனிடையே இவர் கன்னட பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி பெயர் மாதவி. இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகர் போண்டாமணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிற.

Comedy Actor Bonda Mani Sad Side

போண்டா மணிக்கு தீவிர சிகிச்சை:

நடிகர் போண்டா மணி இதயக் கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அதோடு இவருக்கு 58 வயது ஆகிறது. இந்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் போண்டாமணி விரைவில் குணமடைய வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர்.

Advertisement