நாளை நமதே பட நடிகர் சந்திரமோகன் திடீர் மரணம்- அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்

0
493
- Advertisement -

பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் காலமாகியிருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக இருந்தவர் சந்திரமோகன். இவர் மறைந்த இயக்குனர் கே விஸ்வநாதனின் உறவினர் ஆவார். 1966ஆம் ஆண்டு வெளியான ‘ரங்குல ரத்னம்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் சந்திரமோகன் அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தெலுங்கு மொழியில் மட்டுமில்லாமல் தமிழிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக, 1975 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த நாளை நமதே படத்தில் எம்ஜிஆருக்கு தம்பியாக சந்திரமோகன்
நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

- Advertisement -

சந்திரமோகன் திரைப்பயணம்:

அதுமட்டுமில்லாமல் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு மகனாக அந்தமான் காதலி என்ற படத்தில் நடித்திருந்தார் .அதற்குப் பிறகு இவர் தமிழில் கமல், ஸ்ரீபிரியா நடித்த நீயா, தெய்வத்திருமணங்கள், பாதுகாப்பு, டைம், மணி மணி மோர் மணி, சகுனி போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், இவர் பெரும்பாலும் தெலுங்கு மொழி படங்களில் தான் நடித்திருந்தார்.

சந்திரமோகன் நடித்த படங்கள்;

இதுவரை இவர் 900-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் நடிப்பிற்காக பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார். இவர் 2017 ஆம் ஆண்டு வரை தான் சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருந்தார். அதற்கு பின் உடல்நல குறைவால் சினிமாவில் இருந்து விலகி விட்டார். இந்த நிலையில் நடிகர் சந்திரமோகன் இறந்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

-விளம்பரம்-

சந்திரமோகன் இறப்பு:

அதாவது, சமீப காலமாக இவருக்கு இருதய நோய் பிரச்சினை இருந்திருக்கிறது. இதன் காரணமாக இவர் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி சந்திரமோகன் இறந்திருக்கிறார். மேலும், இவருக்கு ஜலந்தர் என்ற மனைவியும், இரண்டு மகள்களும் இருக்கிறார்கள்.

பிரபலங்கள் இரங்கல்:

இவருடைய இறப்பு தெலுங்கு சினிமா உலகில் மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமா உலகில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவருடைய மறைவிற்கு தெலுங்கு திரையுலகினர் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவருடைய இறுதி சடங்கு திங்கட்கிழமை ஹைதராபாத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

Advertisement