ஒரு பக்கம் கை குழந்தைக்கு மருந்து கொடுத்துட்டு, இன்னோரு பக்கம் என் சீரியல் வேலை – ‘வா சாமி’ பாடலாசிரியரின் மனைவி உருக்கம்.

0
1695
annatha
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 2டி தொழில்நுட்பம் தொடங்கிய காலத்திலிருந்து 3டி அனிமேஷன் வரை என அனைத்திலும் இவருடைய படங்கள் தாறுமாறாக ஹிட் கொடுத்து வருகின்றன. மேலும், கடந்த ஆண்டு ரஜினியின் நடிப்பில் வெளிவந்த தர்பார் படம் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தர்பார் படத்தை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளர்கள்.

-விளம்பரம்-
emotional story behind Rajini Annaatthe VaaSaamy lyrics

இந்த படத்திற்கு இமான் இசை அமைத்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அண்ணாத்த படத்தின் முதல் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து படத்தில் ரஜினியின் படத்தின் மூன்று பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த படத்தின் நாலாவது சிங்கிள் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. டி இமான் இசையில் அண்ணாத்த படத்தின் நாலாவது சிங்கிள் ‘வா சாமி’ என்ற பாடல் வெளியாகி இருந்தது. இந்த பாடலை அருண் பாரதி என்பவர் எழுதியுள்ளார்.

இதையும் பாருங்க : சொகுசு கார் வரி விலக்கு விவகாரம், சூர்யா தனுஷ்ஷையும் உதாரணம் காட்டி வாதாடிய விஜய்யின் தரப்பு.

- Advertisement -

ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் குமார் நடித்த விசுவாசம் திரைப்படத்தில் அருண்குமார் பாடல் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அருண்பாரதியின் மனைவியும், பிரபல சீரியல் ரோஜா, புத்தம் புது அர்த்தங்கள் உள்ளிட்ட சீரியல்களின் வசனம் மற்றும் திரைக்கதைகளை எழுதும் எழுத்தாளருமான பத்மாவதி அவர்கள் வா சாமி பாடல் பின்னணி குறித்து சமூக வலைதளங்களில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, பத்து வருடங்களுக்கு மேலாக பாடல் எழுத வேண்டும் என்று போராடி வந்தாய்.

Image

பின் விஜய் ஆண்டனியின் அண்ணாதுரை படத்தில் தொடங்கி சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படம் வரை உயர்ந்து இருக்கிறார். கொரோனா காலகட்டம் ஒரு பக்கம் கைக்குழந்தை கவனிக்க ஆளில்லாமல் நாம் இருவர் மட்டும் வீட்டில் இருந்தோம். வளைகாப்பு நடக்காமல் போனது. ஹாஸ்பிடலில் அட்டெண்டர் கூட கிடையாது. குழந்தையை குளிக்க வைக்க, சாப்பாடு ஊட்டுவது என்று எல்லாமே நீ செய்திருக்கிறாய்.

-விளம்பரம்-
emotional story behind Rajini Annaatthe VaaSaamy lyrics

எனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. ஒரு பக்கம் கை குழந்தைக்கு மருந்து கொடுத்துக் கொண்டும், அழும் குழந்தையை சமாதானம் செய்து கொண்டும், இன்னொரு பக்கம் எனது சீரியல் வேலைகளுக்கு உதவி செய்துகொண்டும், பின் எனது அம்மாவின் உடல்நிலை பார்த்துக் கொள்ள வேண்டிய சூழலில் தான் இந்த பாடலை நீ எழுதி இருக்கிறாய் என்று எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த பாடல் அந்த அளவிற்கு உணர்வுபூர்வமானது. வாழ்த்துக்கள் அருண் பாரதி. நீ பட்ட கஷ்டம் வீண் போகாது. இந்த வா சாமி பாடல் நம் குல சாமி ஆன நமது குழந்தைக்கு சமர்ப்பிக்கிறேன். விசுவாசம் படத்தை அடுத்து இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த சிவா சார் அவர்களின் அன்புக்கும், இமான் சார் அவர்களின் கனிவுக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை. வாழ்த்துக்கள் வா சாமி என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement