நான் பிரதீப்பிற்கு எதிரா இதற்காகத்தான் உரிமை குரல் கொடுத்தேன்- நிகழ்ச்சிக்குப் பிறகு அன்னபாரதி அளித்த பேட்டி

0
503
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 39 நாட்களை கடந்து இருக்கிறது. முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சி அனல் பறந்து கொண்டு இருக்கிறது. அதேபோல் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். பின் கடந்த சனிக்கிழமை பிரதீப் Red Card கொடுத்து வெளியேற்றப்பட்டார். காரணம், பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல். ஆனால், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அதற்கு பின் எவிக்ஷன் இருக்காது என்று பலர் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால், குறைந்த வாக்குகள் அடிப்படையில் பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி தான் கடந்த வாரம் வெளியேறி இருக்கிறார். வந்த வேகத்திலேயே அன்ன பாரதி பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு சென்று விட்டார். இவர் நிகழ்ச்சிக்குள் நுழைந்து ஒரு வாரம் தான் ஆகியிருக்கிறது. இருந்தாலும், இவர் வெளியேறி இருப்பது பலருக்கும் ஷாக் தான். இவர் வெளியேறியதற்கு காரணம், பார்வையாளர்களை கவரவில்லை என்று கமலஹாசனும் சில உதாரணங்களை கூறியிருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

இந்நிலையில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற பிறகு அன்னபாரதி பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அவர், எனக்கு அந்த வீடு ஆரம்பத்தில் புதுசாக இருந்தது. வெளியில் நான் பார்த்த பிக்பாஸுக்கும் உள்ளே நான் பார்த்ததற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. என்னடா கேமராவுக்காக இப்படி நடிக்கிறாங்களே? என்று எனக்கு தோன்றியது. நான் கொஞ்சம் சாப்டான பர்சன் தான். என்னுடைய அடிப்படை குணமே அதுதான். கேமராவுக்காக மெனக்கட்டு ஒரு விஷயம் நான் பண்ண மாட்டேன்.

அன்னபாரதி அளித்த பேட்டி:

கூல் சுரேஷ்- பிரதீப் பிரச்சினை வந்தபோது முதலில் பிரதீப் கிட்ட சத்தம் போட்டது நான் தான். இந்த நிகழ்ச்சியை குழந்தைகள், பெரியவர்கள் என்று எல்லோரும் பார்க்கிறார்கள். பொது நிகழ்ச்சியில் நீங்கள் இப்படி பேசுவது தப்பு பிரதீப் என்று நான் நேரடியாக அவரிடம் சொன்னேன். இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்காக நான் பாதிக்கப்படலாம். ஆனால், என்னால் என் குடும்பம் பாதிக்கப்படக்கூடாது. எல்லோரும் சொல்லியும் அவர் மீதுள்ள தவறை உணராமல் அப்படித்தான் பண்ணுவேன் என்று சொன்னார். என் மேல பிரதீப்க்கு மரியாதை இருந்தது.

-விளம்பரம்-

பிரதீப் குறித்து சொன்னது:

அதனால் அந்த பிரச்சனை போது என்னிடம் பேசியதற்கு மன்னிப்பும் கேட்டார். கெட்ட வார்த்தை பேசாதீங்க என்று சொன்னதை மட்டும் அவர் கடைசி வரைக்கும் கேட்கவில்லை. அவர் கேட்டிருந்தால் வேற லெவலில் இருந்திருக்கும். அதே மாதிரி பிரதீப் சூப்பரா பாடுவார். எப்படித்தான் அத்தனை பாடல்களை ஞாபகத்தில் ர் வைத்திருக்கார் என்று தெரியவில்லை. அவரின் பாட்டு நிச்சயம் அவர் ரசிகர்களுக்கு பிடிக்கும். பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்தது எனக்கு ரொம்பவே அதிர்ச்சியாக இருந்தது. எல்லோரும் நானும் ரெட் கார்ட் கொடுத்தேன் என்று நினைக்கிறார்கள்.

பிரதீப் வெளியேற்றம் குறித்து சொன்னது:

உண்மையில் நான் பிரதீப் இந்த விளையாட்டில் தொடரலாம் என்று தான் சொல்லிட்டு வந்தேன். உரிமைகுரல் எழுப்பினது உண்மைதான். தப்பான வார்த்தை பேசுறாங்க. அது எனக்கு தப்பா தெரிந்து அதுக்கு மட்டும் தான் நான் உரிமை குரல் கொடுத்தேன். அதே மாதிரி நான் யாருடன் கலந்து பேசி எல்லாம் உரிமை குரல் கொடுக்கவில்லை. அதே மாதிரி நான் யாருடனும் கலந்து பேசி எல்லாம் பிரதீப்பை தூக்கவில்லை. நான் அவர் கெட்ட வார்த்தை பேசக்கூடாது என்பதற்காகத்தான் உரிமை குரல் கொடுத்து தூக்கினேன் தவிர ரெட் கார்ட் எல்லாம் நான் கொடுக்கவில்லை. ஒரு மனிதனை இப்படி ஒரு காரணம் சொல்லி ரெக்கார்ட் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை என்று கூறி இருக்கிறார்.

Advertisement