ஜெய் பீம் படத்திற்கு தேசிய விருது கிடைக்காததற்கு காரணம் இது தான் என்று இயக்குனர் சேரன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தேசிய திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் 69 ஆவது வருட தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் சமீபத்தில் நடந்தது. இதில் சிறந்த நடிகர், நடிகை, சிறந்த திரைப்படம் என பல பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது.
அதில் சிறந்த நடிகருக்கான விருதை புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுன் வாங்கி இருக்கிறார். சிறந்த நடிகைக்கான விருதை அலியா பட்டும், நடிகை கீர்த்தி சனோன் ஆகியோருக்கும் வழங்கி இருந்தார்கள். பின் சிறந்த இசையமைப்பாளராக தேவிஸ்ரீ பிரசாத்திற்கு வழங்கி இருக்கிறார்கள். மேலும், சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை விவசாயி படம் வென்று இருக்கிறது. இந்த நிலையில் தமிழ் ரசிகர்கள் பெரிதும் எரிப்பார்க்கப்பட்ட ஜெய் பீம், சார்பட்டா பரம்பரை, கர்ணன் ஆகிய படங்களுக்கு விருது எதுவும் கிடைக்கவில்லை.
தேசிய விருது:
குறிப்பாக, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட ஜெய் பீம் படத்திற்கு விருது கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த லிஜோ மோலிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஆண்டு சூறரை போற்று படத்திற்காக சூர்யா தேசிய விருதை வாங்கி இருந்தது போல் இந்த ஆண்டும் வாங்குவார் என்று ரசிகர்கள் கூறியிருந்தார்கள். ஆனால், ஜெய் பீம் படத்திற்கு எந்த ஒரு பிரிவிலும் விருது கிடைக்காதது குறித்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வருத்தத்துடன் கமெண்ட் போட்டு இருந்தார்கள்.
ரசிகர்கள் வருத்தம்:
அதில் சிலர், ஜெய் பீம் படம் விருது குழுவால் எந்த ஒரு பிரிவிலும் விருது ஏற்கப்படாதது ரசிகர்களாகிய எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. தேசிய விருது இல்லை என்றால் என்ன? எங்கள் இதயத்தில் இந்த படம் எப்போதும் இருக்கும். இந்த படம் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் அதையெல்லாம் விட பெரியது என்று கூறியிருக்கிறார்கள். மேலும், இது தொடர்பாக பிரபலங்கள் பலருமே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள். இந்த நிலையில் ஜெய் பீம் படத்திற்கு தேசிய விருது கிடைக்காததற்கு காரணம் இதுதான் என்று இயக்குனர் சேரன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் சேரன் அளித்த பேட்டி:
பேட்டியில் அவர், ஜெய் பீம் ,கர்ணன், சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு உண்மையான காரணம் நடுவர் குழுவில் இருந்தவர்களை கேட்டால்தான் தெரியும். ஆனால், கடைசி விவசாயி போன்ற ஒரு படத்தில் பேசப்பட்ட விவசாய கருப்பொருளும், ஜாதிய ஆணவம், அதன் பின் நடந்த நிகழ்வுகள் என்று மற்ற படங்கள் கூடிய விஷயங்களை ஒப்பிட்டு பார்த்தால் நமக்கு விவசாயம் முக்கியமா? ஜாதி படுகொலை போன்ற விஷயங்கள் முக்கியமா? கண்டிப்பாக விவசாயம் தான் நமக்கு முக்கியம்.
தேசிய விருது கிடைக்காத காரணம்:
அதனால் தான் கடைசி விவசாயி படத்திற்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. ஆனால், அதையும் தாண்டி இந்த படம் தமிழ் பிரிவில் மட்டுமே சிறந்த படமாக தேர்ந்தெடுத்தப்பட்டது. இதில் ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர் நடித்திருந்தால் அந்த படத்தின் வியாபாரம் வேற மாதிரி இருந்திருக்கும். அதே போல ஜெய் பீம், கர்ணன் போன்ற படங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு பின்னால் அரசியலும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாத ஒன்று என்று கூறியிருக்கிறார்.