எஸ் ஜே சூர்யா உடன் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த டாப் 5 பிரபலங்களின் படம்- யார் யார் தெரியுமா?

0
1328
- Advertisement -

எஸ் ஜே சூர்யா நடித்து வெற்றி கண்ட பிரபல நடிகர்களின் டாப் 5 படங்கள் குறித்த பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர். ஆரம்பத்தில் இவர் துணை இயக்குனராக தான் பணியாற்றினார்.

-விளம்பரம்-

அப்படியே இவர் படங்களில் ஒரு சில காட்சியில் நடித்தும் இருக்கிறார். பின் இவர் இயக்கிய வாலி படம் மூலம் தான் இயக்குனராக சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். தனது முதல் படத்திலேயே எஸ் ஜே சூர்யா மாபெரும் வெற்றி பெற்று சூப்பர் டுபர் ஹிட்டை அளித்தார். அதன் பின் விஜய்யின் குஷி படத்தையும் எஸ் ஜே சூர்யா தான் இயக்கி இருந்தார். இப்படி தமிழ் சினிமாவின் இரு முன்னணி நடிகர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக எஸ் ஜே சூர்யாவின் படம் அமைந்திருந்தது.

- Advertisement -

எஸ் ஜே சூர்யாவின் திரைப்பயணம்:

அதற்கு பிறகு இவர் நியூ, அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி போன்ற பல படங்களை நடித்தும், தயாரித்தும் இருந்தார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு எஸ் ஜே சூர்யா அவர்கள் இசை படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் படத்திலும், விஜயின் மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். பின் இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து இருந்தார். இந்த இரு படங்களும் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்து இருந்தது.

எஸ் ஜே சூர்யா நடித்த படங்கள்:

கடைசியாக இவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தை எஸ்.வினோத் குமார் தயாரித்து இருக்கிறார். ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் விஷால், செல்வராகவன் நடித்து இருக்கிறார்கள். இப்படி சமீப காலமாக எஸ் ஜே சூர்யா நடிப்பில் அரக்கனாய் மாறி பிளந்து கட்டிக் கொண்டு வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவருடன் நடித்த பிரபலங்களின் படங்களும் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் எஸ் ஜே சூர்யா உடன் நடித்த டாப் 5 ஹீரோக்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

மெர்சல்:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் நடிப்பில் அட்லி இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த படம் மெர்சல். இந்த படத்தில் மூலம் தான் எஸ் ஜே சூர்யா தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் வெற்றிக்கு எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு ஒரு காரணம் என்று சொல்லலாம்.

மாநாடு:

கடந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகியிருந்த படம் மாநாடு. இனி சிம்பு தமிழ் சினிமா பக்கமே வரமாட்டார் என்று எதிர்பார்த்த நிலையில் மாநாடு படத்தில் சிம்பு நடித்திருந்தார். இந்த படத்தில் சிம்பு எந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்தாரோ அதே அளவிற்கு எஸ் ஜே சூர்யாவும் கவர்ந்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு என்றே சொல்லலாம். அவருடைய வசனங்கள், உடல் மொழி எல்லாமே வேற லெவலில் இருந்தது தான்.

டான்:

கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த படம் டான். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா பேராசிரியராக நடித்திருப்பார். இந்த படத்திலும் இவர் வில்லனாக பட்டையை கிளப்பி இருப்பார். இந்த படம் முழுக்க இவருடைய காட்சிகள் எல்லாமே வேற லெவலில் இருந்தது. அது மட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயனின் வெற்றிப் படங்களில் இந்த படமும் ஒன்று. இந்த படத்தின் வெற்றிக்கு எஸ் ஜே சூர்யாவும் ஒரு காரணம்.

ஸ்பைடர்:

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியான படம் தான் ஸ்பைடர். இந்த படம் தமிழ் மொழியில் ரீமேக் செய்து வெளியிட்டு இருந்தார்கள். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்து இருந்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு தூள் என்றே சொல்லலாம். அது மட்டும் இல்லாமல் தமிழில் இந்த படம் வெற்றி பெற்றதற்கு காரணம் எஸ் ஜே சூர்யாவின் நடிப்புதான்.

மார்க் ஆண்டனி:

சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி இருந்த படம் மார்க் ஆண்டனி. சமீப காலமாகவே விஷாலுடைய படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால், தற்போது வெளியான மார்க் ஆண்டனி படம் வேற லெவலில் ஹிட் கொடுத்திருக்கிறது. இதற்கு காரணம் எஸ் ஜே சூர்யா தான். உண்மையை சொல்ல போனால் எஸ். ஜே. சூர்யாவுக்காக தான் இந்த படத்தை பார்க்க கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

Advertisement