ஸ்பெஷல் ஷோ கூட இல்ல – தமிழ் நாட்டில் அல்ல, இந்திய அளவிலேயே வாரிசு படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்துள்ள ஜெயிலர்.

0
2086
- Advertisement -

ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. கடந்த சில வாரங்களாக சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருப்பது சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து தான். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றாலே அனைவரும் ரஜினிகாந்தை தான் சொல்வார்கள். ஆனால், சமீப காலமாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று கூறி வருகிறார்கள்.இதனால் சோசியல் மீடியாவில் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் கலவரம் வெடித்து கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

அதற்கேற்றார் போல் ஜெயிலர் படத்தின் பாடல்கள் சர்ச்சையை கிளப்பி இருந்தது . தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜெயிலர். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

- Advertisement -

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினியா இல்லை விஜயா என்ற பஞ்சாயத்து சென்று கொண்டு இருக்க இந்த படத்தின் இரண்டாவது, மூன்றாவது பாடல் எல்லாம் முழுக்க முழுக்க ரஜினிக்காக உருவாக்கப்பட்ட பாடலாக இருக்கிறது. அதோடு இந்த பாடல் வரிகள் மட்டும் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறி இருந்தனர். மேலும், ஜெயிலர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த் அவர்கள் விஜய் பீஸ்ட் படம் சரியாக போகவில்லை என்று பேசி இருந்தார்.

அதே போல ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன கழுகு காகா கதையும் விஜய்யை குறிப்பிட்டு சொன்னதாக விஜய் ரசிகர்கள் பலரும் ரஜினி மீது கடுப்பானார்கள். இதனால் ஜெயிலரை failure ஆகிகுவோம் என்று விஜய் ரசிகர்கள் சபதம் போட்டனர். ஆனால், ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விஜய் ரசிகர்களை ஆசையை பொய்யாக்கியது.

-விளம்பரம்-

அதோடு மட்டுமல்லாமல் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விஜய்யின் வாரிசு படத்தின் முதல் நாள் வசூலை இந்திய அளவில் முறியடித்துள்ளது. நேற்று வெளியான ஜெயிலர் திரைப்படம் முதல் நாளில் இந்த அளவில் 52 கோடியை வசூலித்துள்ளது. அதே போல தமிழ் நாட்டில் மட்டும் இந்த படம் 23 கோடியையும் வசூலித்து விஜய்யின் வாரிசு படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளது.

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய இரண்டு படங்கள் வெளியானது. இதில் வாரிசு திரைப்படம் முதல் நாளில் இந்திய அளவில் 26.5 கோடியும் தமிழ் நாடு அளவில் 17 கோடியும் வசூலித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வாரிசு திரைப்படம் முதல் நாளில் இந்திய அளவில் செய்த வசூலை ஜெயிலர் திரைப்படம் கிட்டத்தட்ட தமிழ் நாட்டிலே வசூலித்து விட்டது.

இத்தனைக்கும் வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருந்தது. இதன் மூலம் தான் தான் சூப்பர் ஸ்டார் என்று மீண்டும் நிரூபித்துள்ளார் ரஜினி. அதே போல முதல் நாள் எப்போதும் படங்களுக்கு வசூல் அதிகமாக தான் இருக்கும் அப்படி இருந்தும் வாரிசு திரைப்படம் முதல் நாளே ரசிகர்கள் மத்தியில் படு கேவலமான விமர்சனத்தை பெற்றதால் இரண்டாம் நாளே படத்தின் வசூல் படுத்தது. ஆனால், ரஜினியின் ஜெயிலர் படம் முதல் நாளே நல்ல விமர்சனங்களை பெற்று வருவதால் இனி வரும் நாட்களில் வசூல் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement