தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் இருந்து சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் சமீப காலமாகவே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சின்னத்திரை தொடர்கள் விளங்கி வருகிறது. குறிப்பாக கொரோனா லாக் டவுனில் இருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சீரியலை விரும்பி பார்த்து வருகிறார்கள். அதில் எப்போதும் சன் டிவி முதலிடத்தை பிடித்து விடும் என்பதில் அய்யமில்லை. டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி முதல் இடம் பிடித்து வருகிறது.
அந்த வகையில் சில வருடமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்ட தொடர்களில் ‘ரோஜா’ சீரியலும் ஒன்று. இந்த தொடர் கடந்த 2018 ஆம் ஆ ண்டு துவங்கப்பட்டது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது. மேலும், ரோஜா சீரியலில் நாயகியாக நடித்தவர் பிரியங்கா.இவர் முதலில் தெலுங்கு மொழி சீரியல்களில் நடித்து இருக்கிறார்.
அதன் பின் இவர் தெலுங்கு மொழியில் வெளிவந்த பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். பின் இவர் தமிழில் ரோஜா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து பிரியங்கா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் என்ற தொடரில் நாயகியாக நடித்த வருகிறார்.
இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வரவேற்பு பெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் இருந்து பிரியங்கா விலகப்போவதாக செய்திகள் வெளியானது. இப்படி ஒரு நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சீதா கதாபாத்திரத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘கடைசி சீதா மேக்கப்’ என்று குறிப்பிட்டு இருந்தார் பிரியங்கா.
பிரியங்கா விலகிய காரணம் :
பிரியங்காவிற்கும் ராகுலுக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நிச்சயதார்தம் முடிந்தது. இவர்களின் திருமண நிட்சயதார்த்தம் முடிந்து ஒரு வருடம் ஆன நிலையில் இவர்கள் திருமணம் நின்றுபோனதாக தகவல்கள் வெளியானது. இப்படி ஒரு நிலையில் கடந்த மாதம் ராகுல் மற்றும் பிரியங்காவின் திருமணம் ஒரு கோவிலில் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் கணவர் சீரியலில் இனி நடிக்க கூடாது என்று கேட்டுக்கொண்டதால் தான் பிரியங்கா விலகிவிட்டார் என்றும் செய்திகள் வெளியானது.
மிக மிக அவசரம் நாயகி :
இந்த நிலையில் பிரியங்காவிற்கு பதிலாக ஸ்ரீ பிரியங்கா என்ற சினிமா நடிகையை கமிட் செய்திருக்கிறார்கள். இவர் சசிகுமார் நடித்த கொம்பு வச்ச சிங்கம்டா போன்ற படங்களில் நடித்திருக்கிறா.ர் அது மட்டும் அல்லாது பெண் காவலர்களின் பிரச்சினைகளை பற்றி பேசிய மிக மிக அவசரம் என்ற படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பின் மூலம் பாராட்டை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த தொடரில் சீதா கேரக்டருக்கு இவர் மிகவும் பொருத்தமாக இருப்பார்கள் என்று படைப்பிரிவுகள் கலந்து கொண்டவர்கள் கூறியிருக்கிறார்கள்.