-விளம்பரம்-
Home செய்திகள் பொழுதுபோக்கு

ஜீவாவின் ‘ப்ளாக்’ படம் வெளிச்சம் தந்ததா? இல்லையா? படம் எப்படி இருக்கு- முழு விமர்சனம் இதோ

0
289

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழும் ஜீவாவின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் பிளாக். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, யோகி, சாரா ஷியாம் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை கே ஜி பாலசுப்பிரமணி இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா?இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் சென்னையில் உப்பளப்பாக்கம் பகுதியில் வாங்கி இருக்கும் தங்களுடைய புதிய வீட்டிற்கு ஜீவா- பிரியா பவானி சங்கர் தம்பதியினர் வருகிறார்கள். இது கடற்கரைப் பகுதியில் இருக்கும் வீடு. இவர்கள் தங்களுடைய விடுமுறை நேரத்தை செலவிட வருகிறார்கள். இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கிறது. ஆனால், யாருமே இந்த வீட்டில் குடியேறவில்லை. பின் இங்கு பல மர்மமான நிகழ்வுகள் நடக்கிறது.

உடனே அந்த இடத்தை விடுத்து தப்பித்து செல்லலாம் என இருவருமே நினைக்கிறார்கள். ஆனாலும், ஒரே இடத்துக்கு மீண்டும் மீண்டும் இருவரும் வருகிறார்கள். அவர்களைப் போலவே சில உருவகங்களும் அங்கே உலவி கொண்டிருக்கின்றது. இறுதியில் ஜீவா- பிரியா பவானி சங்கர் தம்பதி தப்பித்தார்களா? இதற்கு காரணம் என்ன? அந்த வீட்டில் இருக்கும் மர்மம் என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை.

-விளம்பரம்-

இந்த படம் முழுக்க முழுக்க 2013ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான `கோஹரன்ஸ்’ என்ற படத்தின் உடைய ரீமேக் தான். சில மாற்றங்களுடன் இந்த படத்தை தமிழில் இயக்குனர் வெளியிட்டு இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிறப்பான மிரட்டும் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. படத்தின் மொத்த கதையுமே ஜீவா தாங்கி சென்றிருக்கிறது. இவரை அடுத்து பிரியா பவானி சங்கர் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.

-விளம்பரம்-

படத்தில் சில காட்சிகள் சேர்க்கை தனமாகவே இருக்கிறது. சில கதாபாத்திரங்கள் படத்திற்கு வைக்கணும் என்று கட்டாயமாக வைத்தது போல் இருக்கிறது. ஒரே ஒரு குடியிருப்பு பகுதியை மட்டும் வைத்து கதை நகர்கிறது. இதனால் பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்படாத வகையில் இயக்குனர் கொண்டு செல்ல முயற்சித்திருக்கிறார். ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக, இரவு நேர காட்சிகளை அட்டகாசமாக கொடுத்திருக்கிறார்.

பின்னணி இசையும் நன்றாக இருக்கிறது. ஹாலிவுட் படங்கள் ரேஞ்சுக்கு சில காட்சிகள் இருக்கிறது. ஆனால், பாடல்கள் தான் பெரிதாக இல்லை. ஆக்சன் சண்டைக் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. கலை இயக்குனர் உடைய பங்களிப்புமே அற்புதமாக இருக்கிறது. ஆனால், சில காட்சிகள் படத்திற்கு தேவையா? என்று கேட்கும் அளவிற்கு இருக்கிறது. மூன்று காலக்கோடுகளை ஒரே புள்ளியில் இணைத்து காண்பித்து இருப்பது படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது.

சுவாரசியமான கதையை சயின்ஸ் பிக்சனாக இயக்குனர் காண்பிக்க முயற்சிப்பது பாராட்டுக்குரிய ஒன்று.
முதல் பாதி பொறுமையாக சென்றாலும் இரண்டாம் பாதி சிறப்பாக இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். சிம்பிளான முடிவாக இயக்குனர் காண்பித்திருப்பது தான் படத்திற்கு மைனஸ். மொத்தத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீவாவிற்கு இந்த படம் ஒரு கம்பேக்காக இருக்கும் என்று கூறப்படுகிறது. திரில்லர், பயத்தை தாண்டி பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் வகையில் இயக்குனர் கொண்டு சென்றிருப்பது தான் சிறப்பு.

நிறை:

ஜீவா, பிரியா பவானி சங்கர் நடிப்பு சிறப்பு

கதைக்களம் நன்றாக இருக்கிறது

பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

திரில்லர் சயின்ஸ் பிக்சன் கதை

இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது

குறை:

சில காட்சிகள் தேவையா என்று இருக்கிறது

பாடல்கள் பெரிதாக கவரவில்லை

இயக்குனர் கிளைமாக்ஸில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்

சில இடங்களில் காட்சிகள் குழப்பத்தை உருவாக்குகிறது

மொத்தத்தில் ஜீவாவின் பிளாக்- முயற்சி

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news