மறைந்த எல்கேஜி பட நடிகரின் மனைவிக்கு 6 மாதம் சிறைத்தண்டனை – நீதிபதி போட்ட உத்தரவு- பின்ணணி இது தான்

0
1382
JKRithesh
- Advertisement -

நடிகர் ஜே கே ரித்தீஷின் மனைவிக்கு சிறை தண்டனை வழங்கியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நாயகனாக இருந்தவர் ஜே கே ரித்தீஷ். இவர் 2007-ம் ஆண்டு வெளிவந்த “கானல் நீர்” என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் இவர் 2008-ம் ஆண்டு வழிவந்த “நாயகன்” திரைப்படத்திலும், 2010-ம் ஆண்டு வெளிவந்த “பெண் சிங்கம்” திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது 2019-ம் ஆண்டு வெளிவந்த “L.K.G” திரைப்படத்தில் தான். இந்த படத்தில் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதோடு இவர் இப்படத்திற்காக சம்பளம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் திரைத்துறையில் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (தி.மு.க) சேர்ந்தவர் ஆவார்.

- Advertisement -

நடிகர் ஜே கே ரித்தீஷ் குறித்த தகவல்:

இவர் 2009 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இவர் 2019 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது ஏப்ரல் 14, 2019 அன்று மாரடைப்பு ஏற்பட்டு திடீர் என்று உயிரிழந்தார். இவருக்கு வெறும் 46 வயது தான். இவருடைய மரணம் திரை உலகினர் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

ஜோதீஸ்வரி செய்த மோசடி:

இந்த நிலையில் இவருடைய மனைவிக்கு சிறை தண்டனை வழங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகர் ஜேகே ரித்தீசுடைய மனைவியின் பெயர் ஜோதீஸ்வரி. இவருக்கு 41 வயதாகிறது. இவர் காரைக்குடியில் நகை தொழில் செய்து வரும் திருசெல்வம் என்பது திருச்செல்வம் என்பவரிடமிருந்து 60 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகளையும், வெள்ளிப் பொருட்களையும் வாங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

ஜோதீஸ்வரி மீது புகார்:

இதற்கான முழு பணத்தையும் தராமல் இவர் வெறும் 20 லட்சத்துக்கு மட்டும் மூணு காசோலையை கொடுத்திருக்கிறார். இந்த காசோலையை திருச்செல்வம் வங்கியில் கொடுத்த போது அதில் பணம் இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. இதனை அடுத்து தன்னுடைய மொத்த பணத்தையும் தந்துவிட வேண்டும் என்று ஜோதீஸ்வரி இடம் திருச்செல்வம் கூறியிருக்கிறார். ஆனால், ஜோதீஸ்வரி சொன்னபடி பணத்தை தராமல் இழுத்தடித்து இருக்கிறார்.

நீதிபதி போட்ட உத்தரவு:

இதனால் ஆத்திரம் அடைந்த திருச்செல்வம் காரைக்குடி விரைவு நீதிமன்றத்தில் ஜோதிஸ்வரி மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்து இருந்தார். பின் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயப்பிரதா அவர்கள், நடிகர் ஜே கே ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரிக்கு 60 லட்சம் அபராதமும் ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டிருக்கிறது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement