LCUவை போல MCU வா ? மாமன்னன் படத்தின் போஸ்ட்டரை decode செய்யும் ரசிகர்கள்.

0
1364
- Advertisement -

மாரி செல்வராஜின் மாமன்னன் படமும் யுனிவர்ஸ் கதை என்று நெட்டிசன்கள் கூறி வரும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். ஆரம்பத்தில் இவர் ஒரு நடிகராக வேண்டும் என்ற கனவுடன் தான் சினிமாவுக்குள் வந்தார். பின் இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.

-விளம்பரம்-

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு மட்டும் இல்லாமல் பல்வேறு விருதுகளையும் பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. இந்த படத்தில் ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து இருந்தார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது.

- Advertisement -

மாமன்னன் படம்:

தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினிற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு , பகத் பாசில் போன்ற முன்னணி நடிகர்களும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. தற்போது மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

லோகேஷ் யூனிவர்ஸ்:

இந்த நிலையில் மாரி செல்வராஜின் மாமன்னன் படமும் யுனிவர்ஸ் கதை என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, கோலிவுட்டில் முதன்முதலாக யுனிவர்ஸ் என்ற வார்த்தையை உருவாக்கியவர் லோகேஷ் தான். இதை Lcu – lokesh cinematic universe என்று சொல்லுகிறார்கள். லோகேஷ் இயக்கிய கைதி படத்தில் இருந்து தான் விக்ரம் படத்தின் கதை எடுத்து இருந்தார் என்று கூறி இருந்தார்கள். இதனால் லோகேஷை Lcu என்று கூப்பிட்டார்கள்.

-விளம்பரம்-

மாரி செல்வராஜ் யூனிவர்ஸ்:

தற்போது மாரி செல்வராஜ் அதே பாணியை கையில் எடுத்திருக்கிறார் என்று கூறுகிறார்கள். காரணம், மாமன்னன் படத்தில் வடிவேலுவின் கையில் கர்ணன் படத்தில் நடிகர் லால் உடைய புகைப்படம் போன்று ஒரு டாட்டூ குத்தப்பட்டு இருக்கு. கர்ணன் படத்தில் லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் அந்த படத்தில் குதிரை ஓட்டிருந்த சிறுவன் தான் மாமன்னன் படத்தில் வடிவேலு என்றும் தற்போதே கிளப்பி விட்டு இருக்கின்றனர்.

MCUவை உருவாக்குகிறாரா மாரிசெல்வராஜ் :

மேலும், சமீபத்தில் வெளியான போஸ்டரில் உதயநிதி கையில் இருக்கும் வாள் கூட கர்ணன் படத்தில் தனுஷ் பயன்படுத்திய வாள் போலவே இருக்கிறது என்றும் ரசிகர்கள் சிலர் Decode செய்ய துவங்கிவிட்டனர். எனவே, மாமன்னன் படம் MCU – mariselvaraj cinematic universe ஆக இருக்குமோ என்ற கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதுகுறித்து இயக்குனர் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement