என்னைய வெட்டுவேன் குத்துவேன்னு மிரட்டுறாங்க – போலீசில் புகார் கொடுத்ததும் பலனில்லாததால் அமைச்சரை அனுப்பிய சரவணன்

0
808
Saravanan
- Advertisement -

இடத்தை மீட்டுக் கொடுங்கள் என்று நடிகர் சரவணன் அமைச்சரிடம் அளித்திருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் சரவணன். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்து இருந்த பருத்தி வீரன் என்ற படத்தில் சித்தப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மீண்டும் தனெக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார்.

-விளம்பரம்-

தற்போது இவர் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இடத்தை மீட்டுக் கொடுங்கள் என்று நடிகர் சரவணன் அமைச்சரிடம் அளித்திருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று அமைச்சர்கள் கலந்துரையாடும் கூட்டம் நடைபெற்றது.

- Advertisement -

நடிகர் சரவணன் அளித்த கோரிக்கை:

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சரிடம் பொதுமக்களும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் கோரிக்கை மனுக்களை வழங்கி இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் பருத்திவீரன் நடிகர் சரவணனனும் கோரிக்கை மனு அளித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியது, நான் கடந்த 2014 ஆம் ஆண்டு போரூர் மவுலிவாக்கத்தில் செண்பகராமன் என்பவரிடமிருந்து லேக் வியூ அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு வீடுகள் வாங்கி இருந்தேன். அதில் எனக்கு சொந்தமாக இரண்டு வீடுகளுக்கும் சேர்த்து கார் பார்க்கிங் மற்றும் யூ டி எஸ் இடம் 700 முதல் 800 சதுர அடி வரை இருக்கு.

மனுவில் சரவணன் சொன்னது:

இந்த கார் பார்க்கிங் மற்றும் யூ டி எஸ் இடம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை ராமமூர்த்தி என்பவர் வாங்கிக் கொடுத்தார். அதற்கு பின் நான் கொரோனாவிற்காக ஊருக்கு போவதும், வருவதுமாக இருந்தேன். அதோடு எனக்கு இரு மனைவிகள் உள்ளார்கள். அதில் முதல் மனைவியின் உடனான கருத்து வேறுபாடு காரணமாக நான் அந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்கு செல்லாமல் இருந்தேன். இதனால் ராமமூர்த்தி கார் பார்க்கிங் இடத்தில் கடையை கட்டிக்கொண்டு மின் இணைப்பையும் வாங்கி வரி கட்டி விட்டதாக சொல்கிறார்.

-விளம்பரம்-

சரவணன் இடம் குறித்த சர்ச்சை:

என்னுடைய கார் பார்க்கிங், யூ டி எஸ் இடத்தை அவருடையதாக கூறி ஏமாற்றுகிறார். என்னுடைய இடத்தை ஏமாற்றிய ராமமூர்த்தி என் மனைவியை வெட்டுவதாகும் குத்துவதாகும் மிரட்டுகிறார். ராமமூர்த்தி அவருடைய மனைவி ஜெயமணி மற்றும் பத்திரம் பதிவு செய்த இளவரசன் ஆகிய மூன்று பேரும் என்னை ஏமாற்றி அந்த இடத்தை அவர்கள் பெயரில் மாற்றிக் கொண்டார்கள். இதனால் நான் அவர்கள் மீது புகார் அளித்து இருக்கிறேன்.

அமைச்சர் இடம் சரவணன் சொன்னது:

அந்த இடத்தை மீட்டு வாங்கித் தருமாறு நான் அமைச்சர் தாமோ. அன்பரசனிடம் முறையிட்டு மனு கொடுத்து இருக்கிறேன். மேலும், நான் இது தொடர்பாக போரூரில் புகார் அளித்து ஆறு மாதம் ஆகிவிட்டது. ஆனால், அவர்கள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் ராமமூர்த்தி மீது கமிஷ்னர் அலுவலகத்திலும் புகார் அளித்து இருக்கிறேன். குன்றத்தூர் பிடிஓ-விடம் புகார் கொடுத்து இருக்கிறேன். தற்போது அமைச்சரிடமும் கோரிக்கை மனு அளித்து இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement