10 வது திருமண நாளை கொண்டாடிய கார்த்தி – வைரலாகும் அரிய திருமண வீடியோ.

0
14975
karthi
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியும் அடக்கம். தமிழ் சினிமாவின் 80 காலகட்டம் துவங்கி இன்று வரை பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகுமார். இவரது மகன்களான சூர்யா, கார்த்தி இருவருமே இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர்களாக திகழ்ந்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். கார்த்தியின் மூத்த மகனான சூர்யா ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டார். மேலும், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.

-விளம்பரம்-

அதே போல கார்த்தி நடிகர் கார்த்தி கடந்த 2011-ம் ஆண்டு ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பெற்றோர் பார்த்து நிச்சயித்த இந்தத் திருமணம் கோயம்புத்தூரில் நடந்தது. ரஞ்சனி கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர். இத்தம்பதியருக்கு 2013-ம் ஆண்டு இவர்களுக்கு ஒரு மகளும் பிறந்தனர். அவருடைய பெயர் உமையாள்.

இதையும் பாருங்க : போட்டியாளர்கள் ஆடி முடித்ததும் ஜட்ஜ் மாதிரி கமன்ட் சொல்லி பல்ப் வாங்கிய வனிதா.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் கார்த்தியின் மனைவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. கார்த்தியின் குடும்பமே முருகன் பக்தர் என்பதால் அவரது மகனுக்கும் கந்தன் என்று முருகன் பெயரை வைத்துள்ளார் கார்த்தி. இப்படி ஒரு நிலையில் நேற்று ஜூலை 3 ஆம் தேதி கார்த்தி தனது திருமண நாளை கொண்டாடினார்.

Tamil Actor Karthi weds - WeddingSutra | Wedding film, Wedding highlights,  Wedding inspiration

இவரது திருமண நாளையொட்டி கார்த்தியின் திருமண வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. கார்த்தியின் திருமணத்தில் பல்வேரு திரைபரபலன்கள் வந்து இருந்தனர். இறுதியாக இவரது நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement