கொரோனா குறித்து விழுப்புணர்வு வீடீயோவை வெளியிட்ட பிரியங்காவை பங்கமாக கலாய்க்கும் ரசிகர்கள்.

0
2751
Priyanka
- Advertisement -

ஒட்டுமொத்த உலகையும் கதி கலங்க வைத்து இருக்கும் விஷயம் இந்த கொரோனா வைரஸ். இந்த கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இந்த கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதால் அனைத்து சினிமா தியேட்டர்கள், மால்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது.

-விளம்பரம்-

இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி இந்தியா முழுவதும் அனைத்து மாநில அரசுகளும் பிரதமர் மோடி வேண்டுகோள் படி சுய ஊரடங்கு அமல்படுத்தி இருந்தது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் தேவை இல்லாமல் வெளியில் செல்லக் கூடாது என்றும் மக்கள் அனைவரும் வீட்டிலேயே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்து இருந்தது.

- Advertisement -

இதையும் பாருங்க : மீண்டும் விஜய் – முருகதாஸ் கூட்டணியில் கொக்கி போடுகிறாரா இந்த நடிகை ?

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகியாக இருந்து வருகிறார் ப்ரியங்கா. இவரின் சிரிப்பு தான் இவரது பிரபலமே. தற்போது இவர் சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-

இதனால் கடைகள், உணவகங்கள், பொது இடங்கள், கோயில்கள் என அனைத்துக்கும் தடை செய்யப்பட்டிருக்கிறது. நேற்று நடைபெற இருந்த முக்கிய நிகழ்வுகள் எல்லாமே தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இதனால் பொது மக்களும் அரசாங்கம் அறிவித்த அறிக்கையின் படி நடந்து கொண்டார்கள். இந்நிலையில் தொகுப்பாளனி பிரியங்கா அவர்கள் தன்னுடைய இன்ஸ்ட்ரக்ராமில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியது, எல்லோருக்கும் வணக்கம். எல்லோரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஹாட் ஸ்டார் ஆப் உள்ள லாகின் பண்ணி ஐ அம் ஸ்டேயிங் ஹோம்(I Am Staying Home) என்ற ஸ்டிக்கரை பயன்படுத்தி செல்பி எடுத்து அனுப்புங்கள். அதில் இருக்கிற பெஸ்ட் போட்டோக்களை எங்கள் சோசியல் ஸ்பேஸ்சில் போடுவோம் என்று கூறினார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பல பிரபலங்கள் இந்த ஹாட் ஸ்டார் ஆப்(app) குறித்து கூறி வருகிறார்கள்.

ஆனால், பிரியங்கா பேசியுள்ள அந்த வீடீயோவைல் பிரியங்கா கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார். அந்த வீடியோவில் பிரியங்கா மேக்கப் இல்லாமல் இருப்பதை கண்டு பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். மேக்கப் தான் இவ்ளோ நாளா உங்கள காப்பாத்துச்சா என்றெல்லாம் பிரியங்காவை கிண்டல் செய்து வருகிறார்கள்.

Advertisement