மறைமுகமாக ஆதரவு அளித்தது இந்த பிரதமரின் ஒற்றை அரசு – பொல்லாதவன் கிஷோர் பதிவு.

0
1604
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கிஷோர். இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த வருகிறார். இவர் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். அதோடு இவர் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இந்தியாவில் தலைவிரித்தாடும் பிரச்சனைக்கு குரல் கொடுத்து நடிகர் கிஷோர் பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

இந்தியாவில் பாலியல் தொந்தரவு, ஹிஜாப் விவகாரம் போன்ற பல பிரச்சனைகள் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருந்த விவகாரம் நாடு முழுவதும் பூகம்பமாய் வெடித்திருந்தது. தற்போது இது தொடர்பாக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

நடிகர் கிஷோர் பதிவு:

இன்னொரு பக்கம் ஹிஜாப் விவகாரம் தொடர்பாகவும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த இரண்டு விவகாரம் தொடர்பாக நடிகர் கிஷோக் அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், மெல்ல மெல்ல படித்து,அதிகாரம் பெற்று வந்த ஒரு முஸ்லீம் பெண்ணை, ஆண் மேலாதிக்கத்தின் அடையாளமான ஹிஜாப்பிலிருந்து விடுவித்து, அதை வெளிப்படையாக எதிர்க்காமல் அதே ஹிஜாப்பில் தஞ்சம் அடையச் செய்து ஒரே கல்லில் இரண்டு கொலைகள் நடந்துள்ளது. ஒரு பெண் படித்தால், அவளுக்குப் பின் வரும் தலைமுறைகள் கல்வி கற்கும்.

ஹிஜாப் விவகாரம்:

அரசாங்க புள்ளி விவரங்களின் படி, இன்றும் இந்தியாவில் நூற்றில் 14 இசுலாமியப் பெண்களே கல்லூரிக் கல்வியில் சேருகிறார்கள். பெண்களை இங்கேயே நிறுத்திவிட்டால் என்ன செய்வது? குடும்பம், உறவினர்கள், மதம், பாரம்பரியம் என்று எல்லாத் தடைகளையும் தாண்டி கடைசிப் படியில் அதுவும் கல்வியில் இருந்து விலகியதற்கு அவளே காரணமானால்? முஸ்லீம் பெண்ணும், ஒட்டுமொத்த இனமும் நாட்டின் பிரதான நீரோட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டன.

-விளம்பரம்-

மல்யுத்த போராட்டம் குறித்து சொன்னது:

இன்னொரு பக்கம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குப் பதிலாக போராட்டக்காரர்கள் மீது தங்கள் அதிகாரத்தை அடிக்கடி கட்டவிழ்த்துவிடும் முதுகெலும்பில்லாத காவல்துறை. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மறைமுகமாக ஆதரவளித்து அமைதியாக அமர்ந்திருக்கிறது இந்த பிரதமரின் ஒற்றை அரசு. உலகத் தரம் வாய்ந்த பிரபலங்களுக்கு இது நடக்குமானால், நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு இப்படி நடந்தால் என்ன நடக்கும்? அது போதாதா? பல நூற்றாண்டுகளாகப் போராடி இன்று உலகின் உச்சத்தை எட்டியுள்ள தங்கள் பெண் குழந்தைகளுக்கு ஆதரவாக நிற்க வேண்டும்.

மோடி குறித்து சொன்னது:

அப்படி நிற்கும் நாட்டின் தாய் தந்தையர்களை மீண்டும் மனுவின் கற்பனையின் நான்கு சுவர் அடைப்புக்குள் தள்ளும்படி வற்புறுத்துவது ஆகும். மேலும், தற்போது நாட்டில் புதிய நாடாளுமன்றம் திறந்து இருக்கிறார்கள். நாட்டின் பெருமை மிகு பெண்களை சிறையில் தள்ளிவிட்டு தானே முடிசூடும் இந்த நாட்டின் புதிய மன்னர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள் என்று கூறி இருக்கிறார்.

Advertisement