எனக்கு இது மட்டும் தான் ஆசை சங்கர் மாமா – 22ஆம் திருமண நாளில் ரோபோ ஷங்கர் மனைவி போட்ட உருக்கமான பதிவு.

0
416
Roboshankar
- Advertisement -

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர், நடிகைகள் சென்று இருக்கிறார்கள். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து பல்வேறு நடிகர், நடிகைகள் தற்போது சினிமாவில் கலக்கி கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர்.குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர்.

-விளம்பரம்-

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார். முதலில் பாடி பில்டராக இருந்த இவர் மேடை காமெடியனாக அறிமுகமானர். அதன் பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.தொலைக்காட்சியில் டிவி மூலம் இவருக்கு கிடைத்த பிரபலத்தின் வாயிலாக தான் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

ஆரம்பத்தில் சினிமா உலகில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ரோபோ ஷங்கர். அதன் பின்னர் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து இருக்கிறார்.இதனிடையே 2002 ஆம் ஆண்டு நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா, விக்ரம் நடித்த தில் படத்தில் ஒரு சிறு ரோலில் நடித்து இருப்பார். அதே போல இவர்களுக்கு இந்திரஜா என்ற ஒரே ஒரு மகளும் இருக்கிறார். இவர் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘விருமன்’ படத்திலும் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் ரோபோ ஷங்கர் – பிரியங்கா தம்பதி இன்று தங்கள் 22 ஆம் ஆண்டி திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இதனை தொடர்ந்து தங்கள் திருமண புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள பிரியங்கா ’29/11/2002 முதல் 29/11/2023 வரை 22ஆண்டுகள் ஓடிவிட்டது சங்கராம்மா எப்படின்னு தெரியலை.இன்னும் மீதி வருஷத்தை இப்படியே உன் கைப்பிடித்து கொண்டே கடந்துவிடனும்னு மட்டும் என் ஆசை. Happy 22nd anniversary my dear sweet heart sankarammaaaaa’ என்று பதிவிட்டுள்ளார்.

ரோபோ ஷங்கர் ஆரம்பத்தில் ஒரு பாடி பில்டராக தான் மேடை நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால், இவரது குடிப்பழக்கம் காரணமாக சமீபத்தில் இவருக்கு மஞ்சள் கமலை ஏற்பட்டு உடல் மெலிந்து போனது. பின் அதில் இருந்து மீண்டு வந்த ரோபோ ஷங்கர் மீண்டும் உடற் பயிற்சிகளை எல்லாம் செய்து கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைமைக்கு திரும்பி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement