ரோஷினியை தொடர்ந்து அருணும் விலகலா ? பாரதியாக என்ட்ரி கொடுக்கப்போகும் பிக் பாஸ் நடிகர். யார் பாருங்க.

0
503
barathi
- Advertisement -

சமீப காலமாகவே சீரியல்கள் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்க்காக புதுப்புது வித்தியாசமான, கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்து வருகிறது. அந்த வகையில் TRPயில் முன்னிலையில் இருக்கும் சீரியலில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். கண்ணம்மாவாக முதலில் ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார். சமீபத்தில் தான் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். இது ரசிகர்கள் பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. பின் கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். வினுஷா தேவி தேவி அச்சு அசலாக ரோஷினி போல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல்:

மேலும், வினுஷா இந்த தொடரில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து சீரியலின் TRP வேற லெவலில் எகிறியது. இடையில் சீரியலில் இருந்து பாரதியின் தம்பியாக நடித்து இருந்த அகிலன் சினிமா பட வாய்ப்புகள் காரணமாக சீரியல் இருந்து விலகி இருந்தார். தற்போது இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த கண்மணி விலகியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை கண்மணி பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.

சீரியலின் கதை:

இப்படி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் பலர் மாற்றங்கள் செய்தாலும் டி ஆர்பி யில் இந்த சீரியல் முன்னிலை வகித்து வருகிறது. தற்போது பாரதி ஒரு புது மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அதே மருத்துவமனையில் கண்ணம்மாவும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம், வெண்பாவின் அம்மா வெண்பாவிற்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படி பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

சீரியலில் இருந்து விலகும் நடிகர்:

இந்த நிலையில் இந்த சீரியல் இருந்து அதிரடி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், சீரியலில் பாரதி வேடத்தில் நடித்து வருபவர் அருண்பிரசாத். இவர் தற்போது இந்த தொடரில் இருந்து வெளியேற இருக்கிறார் என்ற தகவல் வெளியாக இருக்கிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அதுமட்டுமில்லாமல் அருண் பிரசாத் நடிக்கும் பாரதி கதாபாத்திரத்தில் பிரபல நடிகரும்,

sanjeev

பாரதி ரோலில் நடிக்கும் நடிகர்:

பிக்பாஸ் பிரபலமான சஞ்சீவ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ரோஷிணி சீரியலில் இருந்து வெளியேறியது ரசிகர்கள் பலருக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது. இந்த சமயத்தில் அருண்பிரசாத் வெளியேறினால் சீரிய நிலைமை என்ன ஆகுமோ? என்ற கவலையில் ரசிகர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் அருண் பிரசாத் அவர்கள் ராஜா ராணி 2 சீரியலில் நடிக்கும் வில்லி அர்ச்சனாவை காதலிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement