லட்சுமி குறும்படம் ! ரசிகர் எழுதிய கமெண்ட் ! சர்ச்சை பதிலடி கொடுத்த லட்சுமி ?

0
2289
Lakshmi Priyaa Chandramouli
- Advertisement -

லட்சுமி குறும்படம் வெளிவந்த போது அந்த படத்தின் குழு கூட படத்திற்கு இவ்வளவு விவாதங்கள் உருவாகும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி அனைத்து தரப்பினரும் கருத்து சொல்லும் அளவிற்கு பிரபலமானது அந்த குறும்படம்
lakshmiஇந்த படத்தை வைத்து , அதில் நடித்த லட்சுமியையும் ஒரு தரப்பினர் வசைபாட தான் செய்தனர். அதனை எல்லாம் உதறி அசால்ட்டாக தள்ளிவிட்டு தற்போது அடுத்த படத்தில் நடிப்பதில் பிசியாக உள்ளார் லட்சுமி.

இது குறித்து மீண்டும் சமீபத்தில் ஒருவர ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஆக்கப்பூர்வமாக பதில் அளித்துள்ளார் லட்சுமி.
கணவன் தவறான ஆள் என்றால் அவரை திருத்தியிருக்கவேண்டும் அல்லது அவரிடம் இருந்து விலகியிருக்க வேண்டும், ஆனால் அதனை தானும் பெண்ணியம் பேசி தவறாக நடப்பேன் என்பது மிகத் தவறான உதாரணமாக அமையும். நாட்டின் கலாச்சாரத்தையே நீங்கள் சீரழிக்கிறீர்கள் என்று ஒருவர் கமெண்ட் செய்திருந்தார்.

அதற்கு பதிலளித்த லட்சுமி, நாங்கள் எடுத்த இந்த ஒரு படத்தினால் தான் நாடு கெடுகிறது என்றால், இதற்கு முன்னர் எவ்வளவோ நல்ல படங்கள் வந்துள்ளது, அதனால் நாட்டில் எந்த ஒரு நல்லதும் ஏற்படவில்லை, என ஆக்கபூர்வமான பதில் அளித்து ஆசரியப்படுத்தியுள்ளார்.

Advertisement