தமிழ் சினிமா உலகில் என்னென்றும் சாக்லேட் பாயாக திகழ்பவர் நடிகர் மாதவன். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ படம் மூலம் தான் மாதவன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். ரொமான்டிக் படமான இது சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. சொல்லபோனால் நடிகர் மாதவனுக்கு இந்த படம் தான் சினிமா வாழ்க்கையில் ஒரு நல்ல துவக்கமாக இருந்தது. இப்படி ஒரு நிலையில் மாதவன் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரை பற்றிய ஒரு சிறு பிளாஸ் பேக்கை பார்க்கலாம்.
மாதவன் அவர்களை இருவர் படத்திற்காக ஆடிஷன் செய்ய அழைத்தார் மணிரத்தினம். பின் உனது கண்கள் இளமையாக இருக்கின்றது. இந்த வேடத்திற்கு நீ செட்டாக மாட்டாய் என்று கூறி மணிரத்தினம் அனுப்பினார்.அதன் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து தான் இயக்குனர் மணிரத்னம் மீண்டும் மாதவனை அழைத்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் மாதவன் இந்த பட வாய்ப்பு குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
இதையும் பாருங்க : பிக் பாஸ் வீட்டுக்குள்ள நேரடியாக மோத முடியாத கோழை, வெளியே வந்து நினைச்சதை பேசுவாங்க. ஓவராக வாயாடிய அனிதாவிற்கு ரவீந்திரன் கொடுத்த பதிலடி.
என்னுடைய சினிமா வாழ்க்கைக்கு பலர் உதவி செய்து உள்ளார்கள். டிவியில் இருக்கும் போது பல தயாரிப்பாளர்களிடம் என்னை சிபாரிசு செய்து இருக்கிறார்கள். அதே போல என்னிடம் போன் இல்லாததால் என்னுடைய பக்கத்து வீட்டுகாரவங்களுக்கு தான் போன் வரும். அவர்கள் இரவானால் கூட என்னிடம் வந்து உனக்கு நாளைக்கு ஷூட் இல்ல நல்லா தூங்குன்னு சொல்லிட்டு போவாங்க. அப்போ எனக்கு ஒரு மாதிரி சங்கடமாக போய்விட்டது.
வீடியோவில் 19:25 நிமிடத்தில் பார்க்கவும்
இதனால் நான் எனக்காக ஒரு போன் வாங்கினேன். அந்த மொபில் வாங்கியதால் தான் எனக்கு சந்தோஷ் சிவனின் Ad கிடைத்தது. நான் முதன் முதலில் நடித்த சாண்டல் வுட் டால்க் ad-ல் நடிக்கவிருந்த நபரால் ஷூட்டிங் வரமுடியவில்லை. அதனால் அதில் நடிக்க அவருக்கு குடுக்கற 60 ஆயிரம் ரூபாய் உங்களுக்கு தரனே சொன்னாங்க. எனக்கு உடனே அடப்பாவி 30 ஆயிரம் ரூபாய்க்கு போன் வாங்கினோம் 60 ஆயிரம் டீலா என்று தோன்றியது என்று கூறியுள்ளார்