இப்படி ஆணையிடுகிறவரெல்லாம் என்ன பிராமணரா? – பாஸ்கி கருத்தை ஆதரித்த ஜேம்ஸ் வசந்தன் எழுப்பிய கேள்விகள்.

0
550
- Advertisement -

சமீபத்தில் பிராமணர்கள் குறித்து நடிகர் பாஸ்கி பேசி இருந்த பேச்சு சமூக வலைத்தளத்தில் பெரும் விவாதமானது. அவரின் இந்த பேச்சுக்கு பல பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இசையமைபிபாளர் ஜேம்ஸ் வசந்தன், பாஸ்கியின் கருத்தை ஆதரித்தார். இதுகுறித்து அவர் போட்ட பதிவில் ‘”நகைச்சுவையாளர் பாஸ்கி பேசிய ஒரு காணொலிப் பகுதியை ஒருவர் அனுப்பியிருந்தார். பார்த்தேன், சிரித்தேன், அவர் நகைச்சுவை உணர்வை எப்போதும் போலதான் ரசித்தேன்! அது எந்த விதத்திலும் என்னைப் பாதிக்கவில்லை.

-விளம்பரம்-

மாறாக, ஒரு உண்மையைஎனக்கு நினைவூட்டியது என்றே சொல்லலாம்.”Creativity-யில் பிராமணர்தான் supreme community” என்கிறார். அதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.’செவ்விசை வாய்ப்பாட்டு, வாத்திய இசை, திரைப்பட இசையமைப்பு, வாத்தியக் கலைஞர், பின்னணிப் பாடகர், பாடகியர், இயக்குநர், நடிகர், நடிகையர், விளையாட்டுத் துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, அறிவியல், பொருளாதாரம், நீதித்துறை என எல்லாவற்றிலும் தலைசிறந்து விளங்குபவர் பெரும்பாலும் பிராமணரே.

- Advertisement -

இது எல்லோர்க்கும் தெரிந்ததுதானே? அதை அவர் சொல்லும்போது எந்த அடிப்படையில் மறுக்கமுடியும்? ஏன் மறுக்கவேண்டும்?அது எனக்குக் கோபத்தையோ, வெறுப்பையோ வரவழைத்தால் அது என் கையாலாகாத்தனம். அவர்களோடு போட்டியிட நான் என்னைத் தயார்செய்து கொள்வேன், அல்லது ஒதுங்கிவிடுவேன். அவர்களிடமிருந்து நான் பல நல்ல அம்சங்களைக் கற்றுக்கொள்கிறேன்.

இதைத்தாண்டி, அவர்கள் மற்றவர் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கின்றனர் என்ற ஒரு குற்றச்சாட்டு காலங்காலமாகவே உண்டு. அதில் எனக்கு முழுவதும் உடன்பாடில்லை. அவர்களுக்கென சில பலங்கள் உண்டு.தங்கள் கருத்துகளைத் தெளிவான விதத்தில் எடுத்துரைக்கும் வல்லமையும், கடுமையான கருத்துகளையும் நயமாக எடுத்து வைப்பதும், பிடிக்காதவரைக் கூட புன்முறுவலோடு எதிர்கொள்வதும், ஒரு கூட்டத்தில் தங்கள் சாமர்த்தியத்தால் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதும், அவமானங்களைத் துடைத்தெறிந்து விட்டு இலக்கில் குறியாக இருப்பதும் சில எடுத்துக்காட்டுகள்.

-விளம்பரம்-

இந்த பலங்களை அவர்கள் சரியான இடத்தில், சரியான தருணத்தில் வெளிப்படுத்தி வெற்றியடைகிறார்கள். அந்த உத்திகளை நாம் பயின்றுகொள்ள வேண்டும். இயலாவிட்டால் நம் பாணியில் அமைதியாகத் தொடரவேண்டும். எனக்கு வேகமாக ஓடும் திறமை இருக்கவேண்டும், அல்லது அதை வளர்த்துக்கொள்ள வேண்டும். என்னை விட வேகமாக ஓடக்கூடியவனை நான் எப்படிக் குற்றப்படுத்த முடியும்? என்று ஜேம்ஸ் வசந்தன் பதிவிட்டிருந்தார் அதற்கு பதிலடிகள் வந்த வன்னமாக இருக்கிறது.

ஜேம்ஸ் வசந்தனின் இந்த பதிவிற்கு பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஜேம்ஸ் வசந்தன் ‘நான் சமீபத்தில் எழுதிய ‘பிராமணர்’ பற்றிய என் கருத்துகளுக்கு என்ன மாதிரியான எதிர்கருத்துகள் வரும் என்று தெரிந்துதான் எழுதினேன். அவை என் வாழ்க்கை அனுபவத்தில் என் உணர்வில் பதிந்தப் புரிதல்கள். அதை எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை, வாய்ப்புமில்லை.’

பொதுத்தளத்தில் இவ்வலவு அகன்ற, ஆழமான விஷயத்தை எல்லாரும் புரிந்துகொள்ளும், ஏற்கும் விதத்தில் ஒரே பகிர்வில் எழுதிவிட முடியாது. நான் பகிர்ந்தது ஒரு பரிமாணம். அது நேர்மறையானது. அதனால் எதிர்மறைப் பக்கங்களே இல்லையென நான் சொல்வதாக பலர் கற்பனை செய்துகொண்டதற்கு நான் பொறுப்பாக முடியாது.

வர்ணாசிரம அடிப்படையில் நம் மக்களை தரம்பிரித்து, அவர்களுக்கு எல்லா சமூக உரிமைகளையூம் மறுத்த உண்மைகளை ஏதோ நான் மறந்துவிட்டது போலப் பேசிக்கொண்டிருக்கிறீர் சிலர். அது பல நூற்றாண்டுக் கோபம் என்பதையும் என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது. முன்னோர் செய்த பிழைகளுக்கு இன்று நம்மோடு உறவாடுகிறவனை எப்படி பகைக்க முடியும்? இனமாகப் பகைக்க வேண்டாம்; தனிமனிதனாக அவனை எடைபோடுங்கள் என்பதுதான் என் அறிவுரை. அவன் தவறானவனென்றால் கழுவேற்றுவோம், நல்லவனென்றால் நட்புடன் இருப்போம்!

பழமை வாதம் பேசிக்கொண்டிருக்காமல், மறுக்கப்பட்ட என் மக்களுக்கு இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவும், கல்வியின் அவசியத்தையும், தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும், எதிர்கால இலக்குகளை நிர்ணயிக்கிற திறனையும், ஒருவன் முன்னேறுவதன் மூலம் அவன் சார்ந்த சமூகத்தையே முன்னேற்ற முடியும் என்பதையும் என்னளவில் நான் அவர்களுக்குக் கற்பித்துக் கொண்டு வருகிறேன். என்னோடு பயணிக்கிறவர் பலர்.

அது ஒருபுறம் இருக்கட்டும்! ரொம்ப நல்லவர் போல பலர் இங்கு பேசிக்கொண்டிருக்கின்றனர். எத்தனை பேர் உங்கள் வீடுகளில் இன்று சமூகத்தின் கடை நிலையில் வைக்கப்பட்டிருக்கிற மக்களை உங்கள் வீட்டில் உங்களோடு உங்கள் உணவு மேசையில் அமர்ந்து உணவருந்த வைப்பீர்கள் – மனதுக்குள் எந்தக் கிலேசமும் இல்லாமல்?

வீட்டுப் பணி செய்யும் பணிப்பெண்களுக்கென்று தனித்தட்டு, குவளை வைக்கிறவர்தானே உங்களில் பலர்? தமிழ்நாட்டில் பல ஊர்களில், கடைகளில் இன்னும் இருவேறு தேநீர்க் குவளைகளைப் பயன்படுத்துகிறார்களே, கோயிலுக்குள் ஒரு சாராரை அனுமதிக்க மாட்டேன் என்கிறார்களே, ஊருக்குள் வரக்கூடாது என்கிறார்களே.. இப்படி ஆணையிடுகிறவரெல்லாம் என்ன பிராமணரா? இங்கு கருத்துப் பதிவிடும் பலர் சாதிவெறிக்குள் உழல்பவர்தானே? நீங்கள் எப்படி மற்றவரை விமர்சிக்க முடியும்? என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement