ஷாருக்கானின் மகனுக்கு பேயில் கிடைத்தது குறித்து நடிகர் மாதவன் போட்ட டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அக்டோபர் 3ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தினால் போதை பொருள் தடுப்பு பிரிவினர் ஷாருக்கானின் மகன் உட்பட 10 பேரை கைது செய்தனர் பின் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஷாருக்கான் மகன் ஆர்யனை மும்பையில் உள்ள ஜெயிலில் இருந்தார். இது குறித்து சோசியல் மீடியாவில் பல சலசலப்புகள் எழுந்து இருந்தது. மேலும், தனது மகனின் நிலைமை இப்படி ஆனது என்று தெரிந்தவுடன் ஷாருக்கானும், அவருடைய மனைவியும் வெளியில் வராமல், யாரிடமும் பேசாமல் பேசாமல் இருந்தார்கள்.
ஷாருக்கான் ஒருமுறை மட்டும் தனது மகனை சிறையில் சென்று பார்த்து வந்தார்கள்.தற்போது போதைப் பொருள் வழக்கில் கைதாகி மூன்று வாரத்திற்கு பிறகு ஷாருக்கானின் மகனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இதற்காக ஷாருக்கான் படாத பாடுபட்டார். பல போராட்டங்களுக்கு பிறகு தனது மகனுக்கு ஜாமீன் கிடைத்த உடன் வாதாடிய வழக்கறிஞர் உடன் ஷாருக்கான் மற்றும் அவரது மகன் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இதையும் பாருங்க : பாவனிக்கு பிக்பாஸ் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது இந்த டாப் நடிகர் தானா. பல பிக் பாஸ் பிரபலங்கள் இவர் பிரண்ட் தான் போல
அந்த புகைப்படமும் சோசியல் மீடியாவில் வெளியாகி வந்தது. அதுமட்டுமில்லாமல் ஆரியனின் ஜாமின் செய்தியால் ஷாருக்கான் வீடே விழாக்கோலம் போல் உள்ளது. மேலும், ஷாருக்கானின் மகனுக்கு ஜாமீன் கிடைத்து விட்ட செய்தி தெரிந்த உடன் ரசிகர்கள் பட்டாசு வெடித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினர்.
ஆரியனுக்கு ஜாமீன் கிடைத்ததை அடுத்து பிரபல நடிகர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் ஷாருக்கான் மகன் வெளியே வந்ததை தொடர்ந்து நடிகர் மாதவன் அவர்கள் ட்விட்டர் ஒன்று பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, ஒரு தந்தையாக நான் நிம்மதியாக உணர்கிறேன். இனிமேல் எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த ட்விட்டை பார்த்து ரசிகர்கள் பலரும் மாதவனை வறுத்தெடுத்து வருகின்றனர். ரசிகர்கள் கூறி இருப்பது, உங்களுடைய மகனை ஷாருக்கான் மகனுடன் ஒப்பிடுவது சரியில்லை. அவர் என்ன உங்களுக்கு இரண்டாவது மகனா? உங்கள் மீது நாங்கள் நிறைய மரியாதை வைத்து இருக்கிறோம். ஆனால், நீங்கள் தற்போது பதிவிட்ட ட்வீட்டை பார்த்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. சக நடிகனாக இருப்பதால் நீங்கள் உங்களுடைய நல்ல, திறமையான மகனை பிறர் மகனுடன் அதுவும் ஒரு குற்றவாளியுடன் ஒப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது.
இப்படியெல்லாம் சோசியல் மீடியாவில் பிரபலங்களைப் பூஜித்து தான் சக நடிகர்களின் வாழ்க்கை சக்கரம் சுழல்கிறதா? நேத்து தான் உங்க பையனோட வளர்ப்பைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தோம். ஆனால், நீங்கள் இப்போது உங்கள் பையனை இப்படி எல்லாம் ஒரு குற்றவாளியுடன் ஒப்பிடுவது கஷ்டமாக இருக்கிறது என்று பலரும் மாதவனை தாறுமாறாக மீம்ஸ்களை போட்டு தீட்டிக் கொண்டு வருகிறார்கள். தற்போது இந்த டீவ்ட் சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.