பாவனிக்கு பிக்பாஸ் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது இந்த டாப் நடிகர் தானா. பல பிக் பாஸ் பிரபலங்கள் இவர் பிரண்ட் தான் போல

0
3908
pavni
- Advertisement -

இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சி தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி என பிற மொழிகளிலும் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்களை கடந்து தற்போது 5 வது சீசன் சமீபத்தில் தான் தொடங்கியது. இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம். குறிப்பாக முதல் முறையாக தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே திருநங்கைக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தார்கள். ஆனால், தவிர்க்க முடியாத காரணத்தினால் நிகழ்ச்சியை விட்டு அவர் வெளியேறியது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-
pavni

அதிலும் இந்த முறை நிகழ்ச்சியில் மக்களுக்கு தெரிந்த முகங்களை விட தெரியாதவர்கள் தான் அதிகம் உள்ளார்கள். வழக்கம் போல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாட்களிலேயே போட்டியாளர்களுக்குள் சலசலப்பு தொடங்கியது. முதல் எழிமினேஷனில் நதியா சாங்க் வெளியேறினார். பின் கடந்த வாரம் அபிஷேக் வெளியேறியிருந்தார். இந்த வாரம் யார் எழிமினேஷன் ஆகப் போகிறார்கள் என ஆர்வத்துடன் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பவானி ரெட்டி குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய உடனே சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை குறித்து பல வகையான கருத்துக்களையும், அவர்களைப் பற்றிய தகவல்களையும் தேடி தேடி பதிவிட்டு வருவார்கள்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது நடிகை பாவனா குறித்து புதிய தகவல் ஒன்றை தற்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்கள். நடிகை பவானி ரெட்டி அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, சின்னதம்பி ஆகிய தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னே வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் வெள்ளித் திரையில் பிரபலமாக இருக்கும் ஒரு நடிகரின் மூலம் தான் இவருக்கு பிக்பாஸ் வீட்டில் செல்வதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. பவானி ரெட்டி அவர்கள் பிரதீப் என்பவரை திருமணம் செய்திருந்தார். ஆனால், பிரதீப் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனால் பவானி ரெட்டி மன உளைச்சலில் இருந்தார்.

பின் இவர் ஆனந்த் ராய் என்பவருடன் நெருங்கி பழகி வந்ததார். அதுமட்டுமில்லாமல் நடிகர் சிம்புவுக்கும் இவருக்கும் நெருக்கம் அதிகம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சிம்பு தனக்கு இருக்கும் பிரபலத்தை பயன்படுத்தி பவானிக்கு பிக்பாஸ் வீட்டில் வாய்ப்பை வாங்கி தந்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. சிம்பு, பிக் பாஸ் பிரபலங்களான மஹத், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா போன்றவர்களின் நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் பவானி ரெட்டியும் பிக் பாஸ் வீட்டில் செம்மையாக கேம் விளையாடி வருகிறார். கடந்த வாரம் வரை அவர் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் கடந்த சில தினங்களாகவே தாமரை செல்வியின் காயின் விஷயத்தில் பவானி குறித்து பலவிதமாக சர்ச்சைகள் எழுந்தது. இதனால் இந்த வார இறுதியில் எலிமினேஷனில் இருந்து பவானி தப்பிப்பாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

-விளம்பரம்-
Advertisement