நடிகர் மகாநதி சங்கரின் குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா? புகைப்படத்தை வைரலாக்கும் ரசிகர்கள்

0
1986
- Advertisement -

நடிகர் மகாநதி சங்கரின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்பவர் மகாநதி சங்கர். இவர் படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர வேடங்களிலும், வில்லனாகவும் தான் நடித்து வருகிறார். இவர் முதன் முதலில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த மகாநதி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதன் பின்னரே இவருடைய பெயர் மகாநதி சங்கர் என்று வந்தது.

-விளம்பரம்-

ஆனால், இதற்கு முன் இவர் அம்மா வந்தாச்சு என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது மகாநதி படம் தான். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் வில்லன், நகைச்சுவை போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் தமிழ் சினிமா உலகில் உள்ள ரஜினி, கமல், விஜய், அஜித், சத்யராஜ், பிரபு போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

மகாநதி சங்கர் திரைப்பயணம்:

அது மட்டும் இல்லாமல் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரை தல என்று அழைத்ததே இவர் தான். அதற்குப் பின் தான் இவரை ரசிகர்கள் தல என அழைக்க ஆரம்பித்தார்கள். சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளிவந்திருந்த குளுகுளு என்ற படத்தில் மகாநதி சங்கர் நடித்திருந்தார். இதனை தொடர்ந்தும் இவர் சில படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் வெள்ளித் திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் சில தொடர்களில் நடித்திருக்கிறார்.

மகாநதி சங்கர் நடிக்கும் சீரியல்:

குறிப்பாக, சன் டிவியில் ஒளிபரப்பாகி பல வருடங்களாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நாதஸ்வரம் சீரியலில் இவர் நெல்லை ஆண்டவர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு பின்பு இவர் மாயா, நந்தினி போன்ற சீரியல்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் வானத்தைப்போல சீரியலில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மகாநதி சங்கர் குடும்ப புகைப்படம்:

இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் இவர் படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருடைய குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பெரும்பாலும், மகாநதி சங்கரை வில்லனாக தான் அனைவருக்கும் தெரியும். ஆனால், உண்மையில் இவர் ஒரு பாசக்கார குடும்ப தலைவர் என்று சொல்லலாம். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்கள்.

வைரலாக்கும் ரசிகர்கள்:

சமீபத்தில் தான் மகாநதி சங்கர் தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து கோயிலுக்கு சென்று இருக்கிறார். அங்கு எடுத்த புகைப்படத்தை தான் இணையத்தில் பகிர்ந்திருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் பலருமே, மகாநதி சங்கருக்கு இவ்வளவு பெரிய குழந்தைகள் இருக்கிறார்களா! படங்களில் வில்லனாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாகவும் குடும்ப தலைவனாகவும் இருக்கிறாரே என்று வியந்து புகைப்படத்துக்கு லைக்ஸ் குவித்து வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement