ரோபோ சங்கரின் உடல்நிலை குறித்து அவருடைய அண்ணன் கண்ணீர் மல்க அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர், நடிகைகள் சென்று இருக்கிறார்கள். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து பல்வேறு நடிகர், நடிகைகள் தற்போது சினிமாவில் கலக்கி கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார். முதலில் பாடி பில்டராக இருந்த இவர் மேடை காமெடியனாக ஆனார். அதன் பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மேலும், தொலைக்காட்சியில் டிவி மூலம் கிடைத்த பிரபலத்தின் வாயிலாக தான் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் சினிமா உலகில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ரோபோ ஷங்கர்.
ரோபோ சங்கர் திரைப்பயணம்:
அதன் பின்னர் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களாகவே ரோபோ ஷங்கர் உடல் நலம் குறித்து தான் அதிகம் பேசப்பட்டு வருகிறது. பாடி பெல்ட்டிங் செய்து படு கட்டுமஸ்தான பாடி இருந்த ரோபோ ஷங்கர் சமீப காலமாக உடல் எடை குறைந்து வருகிறார். ரோபோ ஷங்கர் இளைத்து இருப்பதை பார்த்து பலரும் என்ன ஆனது? ஏதாவது சுகரா? இல்ல சரக்கா? என்று கேலி செய்து வந்தனர். இதன் பின் ரோபோ ஷங்கர் உடல் நிலை குறித்து அவரது குடும்பத்தினர் விளக்கம் கொடுத்தனர்.
ரோபோ சங்கர் உடல்நிலை:
அதிலும், குறிப்பாக ரோபோ ஷங்கரின் உறவினரும் நடிகருமான போஸ் வெங்கட் ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை வந்ததாக சொன்னார். பின் ரோபோ சங்கரும் தன் உடல் பிரச்சனை குறித்து பேட்டி அளித்து இருந்தார். தற்போது ரோபோ சங்கர் அவர்கள் உடல்நிலை தேறிக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் ரோபோ சங்கரின் உடல்நிலை குறித்து அவருடைய அண்ணன் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், ரோபோ சங்கர் விஜய் டிவிக்கு வருவதற்கு முன்பு உடற்பயிற்சி எல்லாம் செய்து ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார்.
ரோபோ சங்கர் அண்ணன் அளித்த பேட்டி:
அவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஜிம்மில் சேர்ந்து விட்டார். பரம்பரிய முறைப்படி பல கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். தன்னுடையஉடம்பை கவனித்து ஆரோக்கியமாக வைத்திருந்தார். அதோட ஆரம்ப காலகட்டத்தில் ஒரு நாளைக்கு ஒரே நேரத்தில் 25 முட்டை சாப்பிடுவார். அதுவும் மஞ்சள் கரு இல்லாமல் வெள்ளை மட்டுமே சாப்பிடுவார். ஒரு நாளைக்கு குறைந்தது 70 முட்டை ரோபோ சங்கர் சாப்பிடுவார். அப்படியெல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருந்த ரோபோ சங்கர் உடல்நிலை இப்போது சரியில்லாமல் இருப்பது ரொம்ப வேதனையாக இருக்கிறது. இப்போது அவர் உப்பு போடாத கஞ்சி தண்ணி தான் குடித்துக் கொண்டிருக்கிறார்.
ரோபோ சங்கர் உடல்நிலை குறித்து சொன்னது:
என்னுடைய தம்பியை பல வருடங்கள் கழித்து பார்க்கும்போது எனக்கு அழுகையே வந்து விட்டது. எல்லோருக்கும் உடம்பு சரியில்லாமல் வருவது இயல்பான ஒன்றுதான். அதே மாதிரி தான் ரோபோ சங்கருக்கும் வந்தது. ஆனால், சமூக வலைத்தளங்களில் அவருடைய உடல்நிலை குறித்து தவறான கருத்துக்களும் வததிகளையும் பரப்பி கொண்டு வருகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அவன் யாருக்கும் எந்த துரோகமும் செய்யவில்லை. தவறான உணவு பழக்கங்கள், சில கெட்ட பழக்கங்கள் இருந்தது. ஆனால், அதை இப்போ அவன் விட்டு விட்டான்., இப்போது மீண்டும் ரோபோ சங்கர் பழைய நிலைமைக்கு திரும்பி கொண்டிருக்கும்போது பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.