கண்காட்சியில் வைக்கப்பட்ட மம்மூட்டி எடுத்த புல்புல் பறவையின் புகைப்படம்- இத்தனை லட்சத்துக்கு ஏலமா?

0
46
- Advertisement -

நடிகர் மம்முட்டி எடுத்த புல் புல் பறவையின் புகைப்படம் பல லட்சத்துக்கு ஏலம் போகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகழ்பெற்ற எழுத்தாளரும், பறவை ஆய்வாளர் இந்துசூடன். இவருடைய நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு எர்ணாகுளம் தர்பார் ஹாலில் இந்துசூடனின் பவுண்டேஷன் சார்பில் பறவைகளுடைய புகைப்பட கண்காட்சி நடைபெற்றிருந்தது.

-விளம்பரம்-

‘பாடி பறக்குந்த மலையாளம்’ என்ற தலைப்பில் இந்த கண்காட்சி நடத்தப்பட்டிருக்கிறது. இதில் 23 புகைப்படக் கலைஞர்கள் எடுத்த 61 புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கிறது. குறிப்பாக, நடிகர் மம்மூட்டி எடுத்த புகைப்படமும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. பலா மரத்தின் இலையில் நாட்டு புல்புல் பறவை ஓய்வெடுக்கும் புகைப்படத்தை தான் மம்முட்டி கண்காட்சிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதோட அந்த புகைப்படத்தில் அவருடைய கையெழுத்தும் இருக்கிறது.

- Advertisement -

கண்காட்சியில் மம்மூட்டி புகைப்படம்:

மேலும், இந்த கண்காட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் நிறைவடைந்தது. அந்த நிறைவு நாளில் போட்டோக்கள் எல்லாம் ஏலம் விடப்பட்டது. மம்முட்டி எடுத்த பறவையின் போட்டோவையும் ஏலம் விட்டார்கள். இதற்கு ஆரம்ப விலை ஒரு லட்சம் ரூபாய் என்று அறிவித்தார்கள். அதற்கு கோட்டக்கல் லீனா குரூப் சேர்மன் அச்சு உள்ளாடில் சார்பாக இந்த ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் இரண்டரை இலட்சத்திற்கு கேட்டார்கள். பின் வேறு சிலரும் இந்த புகைப்படத்தை வாங்க ஏலம் கேட்டார்கள்.

மம்மூட்டி புகைப்படம் ஏலம்:

இறுதியில் அச்சு உள்ளாட்டில் மூன்று லட்சம் ரூபாய் கொடுத்து இந்த புகைப்படத்தை வாங்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படத்தை தாங்கள் கட்டி வரும் ஆடம்பர ஓட்டலின் சுவரில் வைக்க இருப்பதாகவும் கூறி இருக்கிறார். மேலும், இந்த ஏலத்தின் மூலம் கிடைத்த பணத்தை இந்துசூடன் பவுண்டேஷனின் பல்வேறு செயல்பாடுகளுக்கு பயன்படுத்த இருப்பதாக பவுண்டேஷனின் உறுப்பினரும், நடிகருமான வி.கே.ஸ்ரீராமன் கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

வி.கே.ஸ்ரீராமன் பேட்டி:

இதை அடுத்து இவர் செய்தியாளர்கள் சந்திப்பில், பறவைகளின் புகைப்பட கண்காட்சி நடத்துவது குறித்து மம்முட்டி இடம் சொல்லியிருந்தோம். அவர் ஒரு புகைப்படம் தருவதாக கூறி புகைப்படம் அனுப்பி வைத்திருந்தார். அந்த புகைப்படத்தை பிரிண்ட் எடுத்து மம்மூட்டியின் கையெழுத்தை பதிவு செய்து பிரேம் செய்து கண்காட்சியில் வைத்தோம். பார்வையாளர்களும் ஆர்வமுடன் அந்த புகைப்படத்தை பார்த்து ரசித்து இருந்தார்கள்.

பறவைகள் புகைப்படம் கண்காட்சி :

அதுமட்டுமில்லாமல் பவுண்டேஷன்காக அந்த புகைப்படத்தை ஏலம் விடலாமா? என்று மம்மூட்டி இடம் கேட்டதற்கு அவர் சந்தோசமாக விற்று விடுங்கள் என்று சொல்லியிருந்தார். நாம் பறவைகளிடம் செலுத்தும் அன்பு இயற்கையிடம் செலுத்தும் அன்புக்கு சமம். ஒவ்வொரு பறவைகளைப் பற்றி அறிந்து கொள்ள ‘கேரளத்திலே பக்‌ஷிகள்’ என்ற புத்தகத்தை இந்துசூடன் வெளியிட்டார். இந்த புத்தகத்தில் இருக்கும் கருத்துக்களை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement