எந்திரன் படத்தில் ரோபோ ரஜினியாக நடித்தது இந்த பிரபல நடிகர் தானா. அவரே பகிர்ந்த Vfx வீடியோ இதோ.

0
4076
rajini
- Advertisement -

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த். ரஜினிகாந்த் – பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த முதல் படம் ‘சிவாஜி’. இப்படம் சூப்பர் ஹிட்டானதும், மீண்டும் ‘எந்திரன்’ என்ற சைன்ஸ்- ஃபிக்ஷன் ஆக்ஷன் ஜானர் படத்துக்காக ரஜினியும், ஷங்கரும் கைகோர்த்தனர். 2010-ஆம் ஆண்டு ரிலீஸான இந்த படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் டூயட் பாடி ஆடியிருந்தார். தமிழ் சினிமாவில் அதுவரை வந்த எல்லா படங்களையும் விட, அதிக பொருட்செலவில் உருவான படம் இது.

-விளம்பரம்-

‘சன் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் மெகா பட்ஜெட்டில் தயாரித்த இந்த படத்துக்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார், ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருந்தார். செம ஸ்டைலிஷான ரஜினி, அசத்தலான ரோபோ ரஜினி, மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் என விஷுவல் ட்ரீட்டாக ஷங்கர் இயக்கிய இந்த படத்துக்கு தன் இசையால் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இதையும் பாருங்க : அவர் மீது தக்க நடவடிக்கை எடுங்க – புகார் அளித்த பிரம்மன் பட நடிகை. தமன்னா என்ன செய்ய போகிறார்?

- Advertisement -

இப்படம் ரிலீஸான போது, தமிழ் திரையுலகமே படத்தின் பிரம்மாண்டத்தை கண்டு அசந்து போனது. தமிழ் திரையுலகம் மட்டுமா.. இந்திய திரை உலகமே வியந்து பார்த்தது. என்ன தான் நாம் பல வித்தியாசமான விஷயங்களை கற்பனை செய்தாலும், அதை விஷுவலாக திரையில் பார்க்கும்போது தான் அனைவரும் லைக்ஸ் போடுவார்கள். தான் கற்பனை செய்தவற்றை அப்படியே வெள்ளித்திரையில் கொண்டு வந்து அந்த மேஜிக்கை நிகழ்த்தி காட்டியவர் இயக்குநர் ஷங்கர்.

Image

மேஜிக் ஒரு முறை தான் நிகழ வேண்டுமா மறுபடியும் அதை விட ஒரு படி மேலே சென்றும் அசத்த முடியும் என்று ‘2.0’ மூலம் ஷங்கர் நிரூபித்தார். ‘எந்திரன்’ படத்தின் சீக்குவல் தான் ‘2.0’. இது முதல் பாகத்தை விட இன்னும் கூடுதல் பொருட்செலவில் தயாரான படம். 2018-ஆம் ஆண்டு ரிலீஸாகி ஹிட்டான இந்த படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.

இதையும் பாருங்க : வீடு புகுந்து சாத்திருவேன்,கிறிஸ்டியன் பொண்ணுன்னு பாக்கற – ஜாக்லினை மிரட்டியுள்ள நபர்.

-விளம்பரம்-

இந்த இரண்டு படங்களின் வெற்றிக்கு மிகப் பெரிய சப்போர்ட்டாகவும், ஷங்கரின் கற்பனை விஷுவலுக்கு உயிர் கொடுத்ததும் VFX பணி தான். தற்போது, பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ், ‘எந்திரன்’ படம் தொடர்பாக ட்விட்டரில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார்.

‘எந்திரன்’ படத்தில் இரண்டு ரஜினி மற்றும் ஐஸ்வர்யா ராய் காரில் சென்று கொண்டிருக்கும் ஒரு காட்சி இருக்கும். அக்காட்சியில் டபுள் ரஜினி இருக்க வேண்டும் என்பதால், படமாக்கப்பட்ட போது ஒரு ரஜினிக்கு பதிலாக மனோஜ் அமர்ந்திருக்கிறார். அந்த காட்சியை எப்படி VFX மூலம் மாற்றப்பட்டு படத்தில் வந்தது என்பதற்கான மேக்கிங் வீடியோ மற்றும் புகைப்படங்களை மனோஜ் வெளியிட்டிருக்கிறார்.

Advertisement