தற்போது உள்ள கால கட்டத்தில் சின்னத் திரையில் இருந்து வெள்ளித்திரக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் சென்ற வண்ணம் இருக்கிறது. அதிலும் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிய பாதி பேர் தற்போது சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள் அதில் பெரும் பாலானோர் தொகுப்பாளர்களாக இருந்தவர்கள் தான். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து தற்போது சினிமாவில் நடிகையாக ஜொலித்து வருபவர் விஜய் டிவி ஜாக்லின்
பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளமை உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ். விஜய் டீவியில் வீ.ஜேவாகும் முன்னர் அதே சேனனில் ஒளிபரப்பப்பட்ட கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் நடித்துள்ளார்.
இதையும் பாருங்க : காட்சியை குறைக்க சொன்னார் கே எஸ். ஆனால், ரஜினி சார் தான் – செந்தில் பகிர்ந்த தகவல். #21yearsofpadaiyappa
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தேன் மொழி என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடரை பலரும் ஜாக்லின் ஒருவருக்காக மட்டும் தான் பார்க்கிறார்கள். எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜாக்லின் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷாக்கிங் பதிவு ஒன்றை செய்திருந்தார்.
அதில், இன்று என் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சண்டை ஏற்பட்டு விட்டது. நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். தெருநாய்களுக்கு என் வீட்டின் முன்னுள்ள கதவருகில் உணவை வைத்திருந்தேன். என் வீட்டிலும் நான் இருப்பதால் அது தொடர்ந்து குலைத்துக்கொண்டே இருந்தது (அது பெரிய தவறுதான்). இருப்பினும் அதற்காக நான் என்னுடைய தவறுக்காக மன்னிப்பு கேட்டு விட்டேன். ஆனால், அவர் என்னை ஒரு வார்த்தை சொன்னது எனக்கு மிகவும் சங்கடமாக ஆகிவிட்டது.
இதையும் பாருங்க : கையை அறுத்துக்கொண்ட பிக் பாஸ் நடிகை. கணவர் செய்த செயல். அவரே வெளியிட்ட வீடியோ.
அதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அது என்னவென்றால் ‘வீடுபுகுந்து சாத்திடுவேன் கிறிஸ்டியன் பொண்ணு விடுறேன்’ நான் செய்த செயலுக்கும் என்னுடைய மதத்தை குறிப்பிடுவதற்கு என்ன தொடர்பு என்று எனக்கு தெரியவில்லை.இந்த சூழ்நிலையில் அது மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள் என்று மிகவும் மன வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார் ஜாக்லின்.
மேலும், மற்றொரு பதிவில் தனது வீட்டு நாயின் புகைப்படத்தை பதிவிட்டு ,உங்களால் முடிந்தால் தெரு நாய்களுக்கு உணவளியுங்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும், ஜாக்லினின் இந்த பதிவுகளை கண்டு பலரும் அவருக்கு ரிப்பிளை செய்து வருகிறார்களாம், அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் ஜாக்லின். நாய்களுக்குகாக நல்ல செய்ய போய் ஜாக்லினுக்கு இப்படி ஒரு அவமானம் ஏற்பட்டுள்ளது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.