சினிமாவில் சாதி பார்த்து தான் வாய்ப்பா? உண்மையை போட்டு உடைத்த எதிர்நீச்சல் மாரிமுத்து

0
1956
- Advertisement -

சினிமாவில் ஜாதி பார்த்து தான் வாய்ப்பு கிடைக்கிறது என்ற சர்ச்சைக்கு நடிகர் மாரிமுத்து பேசியிருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் நிகழ்ச்சி எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற ரோலில் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தை பிடித்திருப்பவர் மாரிமுத்து. இந்த சீரியலின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தது. ஆனால், இதற்கு முன்பு இவர் சினிமாக்களிலும் சீரியல்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் இவர் இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். அதன் பின் இவர் படங்களில் நடிக்க தொடங்கினர். பெரும்பாலும் இவர் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறார். பின் இவருடைய நடிப்பு தீனிக்கு விருந்தாக அமைந்தது தான் எதிர்நீச்சல் சீரியல். இந்த சீரியலில் இவர் ஆதி குணமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். இந்த நிலையில் சினிமாவில் ஜாதி பார்க்கிறார்கள் என்ற சர்ச்சைக்கு மாரிமுத்து கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. அதாவது, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று வா தமிழா வா.

- Advertisement -

வா தமிழா வா நிகழ்ச்சி:

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாரிமுத்து கலந்து கொண்டிருந்தார். இதில் நகரம் அதிகம் ஜாதி பார்ப்பதில்லை vs நகரம் ஜாதி பார்க்கிறது என்ற தலைப்பில் இரு தரப்பினரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வடிவேலு உடன் நடித்து பிரபலம் அடைந்த காமெடி நடிகர் ஒருவர் இதில் கலந்து கொண்டு இருந்தார். அவர், சினிமாவில் அதிகமாக ஜாதி பார்க்கிறார்கள் என்று கூறினார். உடனே மாரிமுத்து அப்படியெல்லாம் இல்லை. நீங்க இங்க ஏறத்தாழ 80 பேர் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால், இங்கு இருக்கிற எல்லோருக்கும் தனித்தனியாக ஒரு அனுபவம் இருக்கும். நான் சென்னைக்கு வந்து முப்பது வருடம் ஆகிவிட்டது. எனக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்தவர்களும் எனக்கு சினிமாவில் வாய்ப்பு அழித்தவர்களும் ஜாதி பார்த்து செய்வதில்லை என்று கூறினார்.

ஜாதி குறித்து காமெடி நடிகர் சொன்னது:

உடனே அந்த காமெடி நடிகர், இப்ப ரெண்டு மூணு வருஷமா சில இயக்குனர்கள் ஏன் ஊர் காரனை வைத்து தான் படம் எடுப்பேன் என்று சொல்கிறார்கள்? ஏன்னா, அவர்கள் அவர்களுடைய ஜாதிக்காரர்களை வளர்த்து விடனும் என்று நினைக்கிறார்கள். அதற்குப் பிற இயக்குனர்களும் துணையாய் இருக்கிறார்கள். இப்படி ஒரு வட்டம் இருக்கு. அதுபோல இன்னொரு பக்கம், என் சாதிக்காரன் தான் நடிக்கணும், என் ஜாதிக்காரன் தான் மேல வரணும் என்கிற வர்க்கமும் இருக்கிறது. இதற்கு இடையில் இருக்கும் நாங்கள் ரொம்ப கஷ்டப்படுகிறோம். உதவி இயக்குனர்கள் கூட தன்னுடைய ஜாதி காரனாக தான் இருக்கணும் என்று சிலர் நினைக்கிறார்கள் என்று சொன்ன உடனே கரு.பழனியப்பன்,
நீங்கள் சொல்வது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று சொல்கிறார்.

-விளம்பரம்-

சினிமா குறித்து சொன்னது:

அதற்கு அந்த காமெடி நடிகர், இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை சார். நீங்களும் ஒரு இயக்குனர் என்பதனால் இதை மறைக்கலாம் என்று வெளிப்படையாக பேசினார். பின் கரு பழனியப்பன், அப்படியெல்லாம் மறைக்கவில்லை என்று சொன்னவுடன் அவரை மறுத்து அந்த காமெடி நடிகர் நீங்கள் தனியாய் இருந்து யோசித்துப் பாருங்கள் உங்களுக்கு புரியும். பின் மாரிமுத்துவை பார்த்து இவருக்கும் தெரியும் என்று சொல்கிறார். இவரை அடுத்து மாரிமுத்து, உங்களுக்கு மூன்று வருடமாக வாய்ப்பு இல்லை என்பது ரொம்ப ஆச்சரியமாக இருக்கு. நீங்கள் எத்தனையோ வடிவேல் படங்களில் நல்ல கதாபாத்திரம் பண்ணியிருக்கிறீர்கள். அதனால் எங்கேயோ இருட்டில் அடி வாங்கி இருக்கீங்கன்னு தான் நினைக்கிறேன்.

மாரிமுத்து கொடுத்த பதிலடி:

நீங்கள் சொல்வது மாதிரி வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் அவரவர்கள் மனதிற்குள் யார்யார் என்ன ஜாதி என்ற எண்ணோட்டம் இருந்து கொண்டு தான் இருக்கும். அதைப்பற்றி நாம் பேசுவது இல்லை. ஆனால், பரியேறும் பெருமாள் படத்தில் எனக்கு அந்த கதாபாத்திரத்தை கொடுத்தது ஜாதி பார்த்து கொடுக்கவில்லை.என் நடிப்பின் மீது நம்பிக்கை இருந்ததால் அவர்கள் எனக்கு தந்தது. இங்கு பாரதிராஜாவும் பாக்யராஜும் பாலச்சந்திரனும் ஆரம்பத்திலேயே யாரையும் தூக்கி வைத்து கொண்டாட வில்லை. ஆரம்பத்தில் அவர்களும் எவ்வளவோ பிரச்சனைகளையும் போராட்டங்களையும் சந்தித்துதான் சினிமாவில் முன்னேறி இருக்கிறார்கள் என்று காரசாரமாக பதிலளித்துக் கொடுத்திருக்கிறார்.

Advertisement